ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்கு நாடு முழுவதும் 19 ரயில் நீர் உற்பத்தி ஆலைகள் செயல்படுகின்றன

இடுகை இடப்பட்ட நாள்: 05 AUG 2026 3:28PM by PIB Chennai

நாடு முழுவதும் அனைத்து முக்கிய ரயில்கள், ரயில் நிலையங்களில் குடிநீருக்கான ரயில் நீர் பாட்டில் தேவை ஏற்கனவே உள்ள ரயில் நீர் உற்பத்தி ஆலைகள் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.  இந்திய ரயில்வேயில் ரயில் நீருக்கான தேவை, அவசியத்தின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில் புதிய ரயில் நீர் ஆலைகளை அமைக்கும் பொறுப்பு இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நாள்தோறும் 1 லட்சம் பாட்டில்கள் உற்பத்தி செய்வதற்கான ரயில் நீர் ஆலையை அமைப்பதற்கு சுமார் ரூ.10 கோடி செலவாகிறது. செங்கல்பட்டு அருகே பாலூர் உட்பட நாடு முழுவதும் 19 இடங்களில் ரயில் நீர் உற்பத்தி ஆலைகள் செயல்படுகின்றன.

இத்தகவலை ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த போது தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294809&reg=3&lang=1

****

TV/IR/SU/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2295146) வருகையாளர் எண்ணிக்கை : 63
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Bengali-TR , Punjabi , Gujarati , Kannada