நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இறக்குமதி செய்யப்பட்ட தடை விதிக்கப்பட்ட 364 மெட்ரிக் டன் பாகிஸ்தான் உலர் பேரிச்சம் பழங்களை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் பறிமுதல் செய்தது

प्रविष्टि तिथि: 05 AUG 2026 12:22PM by PIB Chennai

பாகிஸ்தானில் உற்பத்தியான பொருட்கள் மூன்றாம் நாடுகளின் வழியாக ரகசியமாக வழிமாற்றப்பட்டு தவறான தகவல்களுடன் இறக்குமதி செய்வது குறித்த தகவல் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்திற்கு கிடைத்தது. இதையடுத்து கண்ட்லா துறைமுகத்தில் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட தடை விதிக்கப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான 364 மெட்ரிக் டன் உலர் பேரிச்சம் பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அவை, ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும் உண்மையில் பாகிஸ்தானில் உற்பத்தியானது என்பது தெரிய வந்தது.

இந்த பேரிச்சம் பழங்களை கொண்ட கொள்கலன்கள் முதலில் பாகிஸ்தானிலிருந்து துபாய்க்கு அனுப்பப்பட்டு பின்னர் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வதற்காக மற்றொரு கொள்கலன்களில் மாற்றியதாக விசாரணையில் தெரிய வந்தது. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294697&reg=3&lang=1

****

TV/IR/SU/SH

 


(रिलीज़ आईडी: 2295096) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी , Marathi , Bengali , Bengali-TR , Telugu