சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
குஜராத், ராஜஸ்தானில் பரவி வரும் சந்திப்புரா வைரஸ்: நோய்த்தடுப்பு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக கூட்டுக்குழு அனுப்பப்பட்டுள்ளது
प्रविष्टि तिथि:
05 AUG 2026 12:07PM by PIB Chennai
குஜராத், ராஜஸ்தானில் பரவி வரும் சந்திப்புரா வைரஸ் நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்த தேசிய கூட்டு நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக் குழுவை மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சகம் அங்கு அனுப்பியுள்ளது. நோய் பரவும் வீதம், நோயின் தன்மை தொற்றுநோய் மற்றும் சாத்தியமிக்க சிகிச்சை அணுகுமுறைகள் குறித்த புரிதலை ஏற்படுத்துவதும் ஆதாரங்கள் அடிப்படையிலான பொது சுகாதார நடவடிக்கைகளில் வழிகாட்டுவதும் இந்த ஒருங்கிணைந்த முயற்சிகளின் நோக்கமாகும். தேசிய கூட்டு நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக் குழுவிற்கு உதவுவதற்காக தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் பொது சுகாதார அவசர கால செயல்பாட்டு மையமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுமம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை ஆகியவற்றின் நிபுணர்களைக் கொண்ட இந்தக் கூட்டுக்குழு நோய் பரவல் குறித்த விசாரணை தொற்றுநோய் மதிப்பீடு, மருத்துவ மேலாண்மை, ஆய்வக ஒருங்கிணைப்பு உள்ளிட்டவற்றில் மாநில அரசுகளின் முயற்சிகளுக்கு உதவும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294690®=3&lang=1
****
TV/IR/SU/SH
(रिलीज़ आईडी: 2295091)
आगंतुक पटल : 8