சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
சர்வதேச பெரிய புள்ளி சிறுத்தை தினத்தில், இந்த சிறுத்தைகளின் பாதுகாப்பை இந்தியா மேலும் உறுதிப்படுத்துகிறது
प्रविष्टि तिथि:
04 AUG 2026 12:41PM by PIB Chennai
சர்வதேச பெரிய புள்ளி சிறுத்தை தினத்தை முன்னிட்டு, ஆசியாவின் மிகவும் அரிதான காட்டுப் பூனை இனங்களில் ஒன்றான இதனைப் பாதுகாப்பதற்கான தனது உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இதற்காகப் புதிதாக 'பெரிய புள்ளி சிறுத்தை பாதுகாப்புச் செயல்திட்டம்' (CAP) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அரசு, சர்வதேச சுற்றுச்சூழல் நிதியம் (GEF) மற்றும் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம் (UNDP) ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் கீழ் தயாரிக்கப்பட்ட இந்தத் திட்டம், 2026 ஜூலை இரண்டாம் வாரத்தில் கோயம்புத்தூரில் நடைபெற்ற தேசிய வனவிலங்கு வாரியத்தின் நிலைக்குழுவின் (SCNBWL) 91-வது கூட்டத்தின்போது வெளியிடப்பட்டது
வடகிழக்கு இந்தியாவில் 14 முன்னுரிமைக்குரிய பாதுகாப்பு நிலப்பரப்புகளை அடையாளம் காண்பது, அத்துடன் வன வாழ்விடங்களுக்கு இடையிலான தொடர்பை வலுப்படுத்த நிலப்பரப்பு அளவிலான வாழ்விட மீட்பு மற்றும் வழித்தடப் பாதுகாப்பை மேற்கொள்வது ஆகியவை இந்தச் செயல்திட்டத்தின் முக்கிய கூறுகளாகும். மேலும், வனவிலங்கு வாழ்விடங்களின் ஒருங்கிணைந்த மேம்பாடு (IDWH) திட்டத்தின் கீழ் உள்ள இன மீட்புத் திட்டத்தில் (Species Recovery Programme) மேகச்சிறுத்தையைச் சேர்ப்பதன் மூலம், அதனைப் பாதுகாப்பதற்கான நிறுவனக் கட்டமைப்பையும் அரசு வலுப்படுத்தியுள்ளது. வனவிலங்குப் பாதுகாப்பில் உள்ளூர் சமூகங்களின் முக்கியப் பங்கை அங்கீகரித்து, இந்தச் செயல்திட்டம் சமூகம் சார்ந்த பாதுகாப்பையும் நிலையான வாழ்வாதார ஆதரவையும் ஊக்குவிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294168®=3&lang=1
****
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2294489)
आगंतुक पटल : 8