சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அருணாச்சலப் பிரதேசத்தின் முதல் ராம்சார் தளமாக 'க்லாவ் ஏரி' அறிவிப்பு; இந்தியாவின் ராம்சார் தளங்களின் எண்ணிக்கை 101-ஐ எட்டியது

இடுகை இடப்பட்ட நாள்: 03 AUG 2026 8:10PM by PIB Chennai

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள க்லாவ் ஏரி, இந்தியாவின் 101-வது ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் இன்று அறிவித்தார். இதன் மூலம் அம்மாநிலம் தனது முதல் ராம்சார் தளத்தைப் பெற்று ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. உயிரியல் பன்முகத்தன்மை பாதுகாப்பு, நீர் மற்றும் பருவநிலை பாதுகாப்பு மற்றும் நிலையான வாழ்வாதாரம் ஆகியவற்றிற்கு இந்த நிகழ்வு ஒரு முக்கிய நடவடிக்கை என்று சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் அமைச்சர் குறிப்பிட்டார்.

"நாட்டில் 2014-ல் 26-ஆக இருந்த ராம்சார் தளங்களின் எண்ணிக்கை இன்று 101-ஆக உயர்ந்துள்ளது. இந்தச் சிறப்பான பயணம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் நிலையான மேம்பாடு ஆகியவற்றில் நமது  உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது," என்று அவர் கூறினார். மேலும், ஒவ்வொரு புதிய ராம்சார் தளமும், இயற்கையைப் பாதுகாப்பதுடன், இந்த முக்கிய சூழலியல்களைச் சார்ந்திருக்கும் சமூகங்களின் நலன்களையும் காப்பதில் இந்தியாவின் உறுதியை மேலும் வலுப்படுத்துகிறது என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

“ராம்சார் தளங்களைத் தேர்ந்தெடுப்பதில் இந்தியா தனது நூற்றாண்டைக் கடந்த பயணத்தைத் தொடர்கிறது” என்று அமைச்சர் குறிப்பிட்டார். க்லாவ் ஏரியும் சேர்க்கப்பட்டதன் மூலம், இந்தியாவில் உள்ள ராம்சார் தளங்களின் எண்ணிக்கை 101-ஐ எட்டியுள்ளது. இது, நாட்டின் விலைமதிப்பற்ற ஈரநிலச் சூழலியல்களைப் பாதுகாப்பதில் அதன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294036&reg=3&lang=2                    

***

TV/BR/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2294115) வருகையாளர் எண்ணிக்கை : 83
இந்த வெளியீட்டை படிக்க: Kannada , English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Manipuri , Punjabi , Gujarati