பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

காமன்வெல்த் ஆடவர் 55 கிலோ குத்துச்சண்டை பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜதுமணி சிங் மாண்டெங்பாமிற்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 02 AUG 2026 12:52AM by PIB Chennai

கிளாஸ்கோவில் நடைபெறும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் 55 கிலோ குத்துச்சண்டை பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜதுமணி சிங் மாண்டெங்பாமிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜதுமணி சிங் மாண்டெங்பாமின் வெற்றியானது, அவரது தைரியம், ஒழுக்கம், விடாமுயற்சியைப் பிரதிபலிக்கிறது என்று பிரதமர் கூறியுள்ளார்.

அவரது எதிர்கால முயற்சிகளுக்கு திரு நரேந்திர மோடி தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் 55 கிலோ குத்துச்சண்டை பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜதுமணி சிங் மாண்டெங்பாமிற்கு வாழ்த்துகள். அவரது வெற்றிக்கு அவரது தைரியம், ஒழுக்கம், விடாமுயற்சி ஆகியவையே உந்துசக்தியாக உள்ளது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்."

***

(Release ID: 2293179)

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2293451) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Gujarati , Telugu , Kannada , Malayalam