சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
முதுநிலை நீட் தேர்வுக்கான தயார் நிலையை மத்திய அமைச்சர் திரு ஜெ.பி. நட்டா ஆய்வு செய்தார்
प्रविष्टि तिथि:
01 AUG 2026 7:19PM by PIB Chennai
2026 ஆகஸ்ட் 30 அன்று நடைபெறவுள்ள முதுகலை பட்டப்படிப்புகளுக்கான தேசிய தகுதி, நுழைவுத் தேர்வான (NEET-PG) நீட் -2026-ஐ, சுமூகமாகவும், பாதுகாப்பாகவும், வெளிப்படையாகவும், நேர்மையாகவும் தொழில்நுட்ப உதவியுடன் நடத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில், அதற்கான ஆயத்தப் பணிகளை மத்திய சுகாதார அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா இன்று (01.08.2026) ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, தேர்வை நடத்துவதில் ஈடுபட்டுள்ள தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம், தொழில்நுட்ப அமைப்புகள், பிற தரப்பினரின் தயார்நிலையை அமைச்சர் மதிப்பீடு செய்தார். தேர்வு ஏற்பாடுகள், தேர்வர்களுக்கான வசதி நடவடிக்கைகள், பாதுகாப்பு கட்டமைப்பு, தொழில்நுட்பம் சார்ந்த தலையீடுகள் குறித்து அவருக்கு விளக்கப்பட்டது.
நேர்மை, பாதுகாப்பு ஆகியவற்றின் மிக உயர்ந்த தரநிலைகளைப் பேணிக்காத்து, நியாயமான, வெளிப்படையான, தேர்வர்களுக்கு உகந்த தேர்வை உறுதிசெய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார். தேர்வு தொடர்பான வதந்திகள் அல்லது மோசடியான கூற்றுக்களை தேர்வர்கள் நம்ப வேண்டாம் என்று திரு. நட்டா வலியுறுத்தினார்.
முதுநிலை நீட்- 2026 தேர்வுக்கு மொத்தம் 2,73,183 தேர்வர்கள் வெற்றிகரமாகப் பதிவு செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 12.5% அதிகமாகும். இந்தத் தேர்வு, சுமார் 340 நகரங்களில் உள்ள 1,300 க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நடத்தப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293072®=48&lang=1
****
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2293148)
आगंतुक पटल : 15