பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆந்திராவில் வளர்ச்சித் திட்டங்கள் தொடக்க விழாவில் ஆற்றிய உரையின் சில முக்கிய அம்சங்களை பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 01 AUG 2026 4:54PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆந்திரப் பிரதேசத்தில் வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்ட நிகழ்வில் தாம் ஆற்றிய உரையின் சில முக்கிய அம்சங்களைப் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:

“போகபுரத்தில் அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டதற்காக, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த எனது சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துகள்.

இந்த விமான நிலையத்திற்கு அல்லூரி சீதாராம ராஜுவின் பெயரிடப்பட்டுள்ளது, வரலாற்று ஆளுமைகளின் பங்களிப்பை அங்கீகரிப்பதில் நாம் காட்டும் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.”

"மத்தியிலும் ஆந்திரப் பிரதேசத்திலும் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசுகள், மாநிலத்தின் முன்னேற்றத்திற்காகக் குறிப்பிடத்தக்க வேகத்தில் செயல்பட்டு வருகின்றன. நாங்கள் நீலப் பொருளாதாரம், துறைமுக மேம்பாடு, தொழில்துறை வளர்ச்சி என பலவற்றில் கவனம் செலுத்தி வருகிறோம்."

"என் நண்பர் திரு சந்திரபாபு நாயுடுவின் தலைமையில், ஆந்திரப் பிரதேசம் சிறந்த எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து, அதை நோக்கி மிகுந்த முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. செமிகண்டக்டர், தகவல் தொழில்நுட்பம், புத்தாக்கம் போன்ற துறைகளில் இந்த மாநிலம் முன்னேறி வருகிறது. இது மாநில இளைஞர்களுக்குப் பயனளிக்கும்."

***

(Release ID: 2292999)

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2293053) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Gujarati , Malayalam