பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் 110 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற லவ்பிரீத் சிங்குக்குப் பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 31 JUL 2026 2:32PM by PIB Chennai

2026 கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் 110 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற லவ்பிரீத் சிங்குக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

து சிறப்பான முயற்சியால்ஸ்னாட்ச் பிரிவில் லவ்பிரீத் சிங் காமன்வெல்த் விளையாட்டில் புதிய சாதனையைப் படைத்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அவரது அர்ப்பணிப்பையும், உறுதியையும் பிரதமர் பாராட்டியுள்ளார். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு தது நல்வாழ்த்துகளைப் பிரதமர்  தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

"ஆடவர் 110 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற லவ்பிரீத் சிங்கின் சிறப்பான செயல்பாடு பாராட்டுக்குரியது. ஸ்னாட்ச் பிரிவில் அவரது அபாரமான முயற்சிகாமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஒரு புதிய சாதனையையும் படைத்துள்ளது. அவரது அர்ப்பணிப்பும் உறுதியும் உண்மையிலேயே போற்றத்தக்கவை. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துகள்."

***

SS/PLM/RJ/SE


(रिलीज़ आईडी: 2292641) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , Marathi , Kannada , Malayalam , Assamese , English , Urdu , हिन्दी , Bengali , Manipuri , Punjabi , Gujarati