பிரதமர் அலுவலகம்
முன்ஷி பிரேம்சந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
31 JUL 2026 1:48PM by PIB Chennai
புகழ்பெற்ற இலக்கியவாதியான முன்ஷி பிரேம்சந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
முன்ஷி பிரேம்சந்த் தமது காலத்தால் அழியாத இலக்கியப் படைப்புகள் மூலம் மனித உணர்வுகள் தொடர்பாக சக்திவாய்ந்த கருத்துகளை வழங்கினார் என்றும், அது இன்றும் பொருத்தமானதாகத் தொடர்கிறது என்றும் பிரதமர் கூறியுள்ளார். மேலும், தமது பிறப்பிடமான காசியின் இலக்கியப் பாரம்பரியத்தை உலக அங்கீகாரத்திற்குக் கொண்டு வந்ததில் அவர் ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்பையும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
யதார்த்தம், சமூக சமத்துவம் ஆகியவற்றில் வேரூன்றிய முன்ஷி பிரேம்சந்தின் இலக்கியம், நாட்டு மக்களுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292303®=3&lang=1
***
SS/PLM/RJ/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2292595)
வருகையாளர் எண்ணிக்கை : 34
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam