பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோயில், 594 கி.மீ நீள புதிய கங்கை விரைவுச்சாலையைப் பிரதமர் திறந்து வைத்தார்

प्रविष्टि तिथि: 29 APR 2026 3:10PM by PIB Chennai

உத்தரப்பிரதேசத்தின் ஹர்தோய் நகரில் 594 கி.மீ நீளமுள்ள, அணுகல் கட்டுப்பாட்டுடன் கூடிய புதிய கங்கை  விரைவுச்சாலையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார். விழாவில் பேசிய அவர், "உத்தரப்பிரதேசத்திற்கு விரைவுச்சாலைகள் கிடைத்திருப்பது, கங்கை அன்னை அளித்த ஆசீர்வாதமாகும்," என்று கூறினார். இந்த விரைவுச்சாலை, புனிதத் தலங்களுக்கான பயணத்தை சில மணி நேரங்களிலேயே எவ்வாறு மாற்றியமைக்கும் என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.

கங்கை அன்னையின் காலத்தால் அழியாத முக்கியத்துவத்தையும் நவீன உள்கட்டமைப்பையும் ஒப்பிட்டுப் பேசிய பிரதமர், மாநிலத்தின் வளர்ச்சிப் பயணத்தில் இந்த விரைவுச்சாலையின் மாற்றத்தை ஏற்படுத்தும் பங்கை வலியுறுத்தினார். புதிதாகக் கட்டப்பட்ட இந்த நெடுஞ்சாலைகள், வளர்ந்து வரும் இந்தியாவின் உயிர்நாடிகளாகத் திகழ்கின்றன என்று குறிப்பிட்ட திரு மோடி, "இந்த நவீன உயிர்நாடிகள், இன்று இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலத்தைப் பறைசாற்றுகின்றன" என்று தெரிவித்தார்.

அரசின் உள்கட்டமைப்பு கட்டுமானப் பணிகள் தூரிதப்படுத்தப்படுவதை சுட்டிக்காட்டிய பிரதமர், நாட்டின் மிக நீளமான பசுமை வழித்தடமான கங்கை விரைவுச்சாலை, ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் கட்டி முடிக்கப்பட்டதைக் குறிப்பிட்டார். விரைவான நவீனமயமாக்கலுக்கான தனது தொலைநோக்குப் பார்வையை வலியுறுத்திய அவர், "இதுதான் தற்போதைய அரசின் வேகம்! இப்படித்தான் தற்போதைய அரசு செயல்படுகிறது!" என்று குறிப்பிட்டார்.

விவசாய சமூகங்கள் எதிர்கொள்ளும் நீண்டகால சவால்களைக் குறிப்பிட்ட பிரதமர், இந்த வளமான பிராந்தியங்களில் உள்ள விவசாயிகள், போதுமான தளவாட உள்கட்டமைப்பு மற்றும் குளிர்பதனக் கிடங்கு வசதிகள் இல்லாததால், பல ஆண்டுகளாக முக்கிய சந்தைகளை அணுகுவதில் சிரமப்பட்டனர் என்று கூறினார். மேம்பட்ட இணைப்பு வசதிகளின் மாற்றகரமான ஆற்றலை வலியுறுத்திய அவர், "இது நமது விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியாவின் பரந்த நாகரிக மற்றும் பொருளாதார லட்சியங்களுக்குள் உத்தரப்பிரதேசத்தின் வளர்ச்சியை நிலைநிறுத்திய பிரதமர், மாநிலத்தின் இத்தகைய மாற்றம், தேசத்தின் முக்கிய தீர்மானத்தை உள்ளடக்கியுள்ளது என்று வலியுறுத்தினார். "இன்று, ஒட்டுமொத்த நாடும் 'வளர்ச்சியடைந்த பாரதம்' என்ற ஒரே தீர்மானத்துடன் முன்னேறி வருகிறது! இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் உத்தரப்பிரதேசத்திற்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு," என்று திரு மோடி கூறினார்.

உலகளாவிய ஸ்திரமின்மையையும், இந்தியாவின் எழுச்சிக்கு நிலவும் வெளிப்புற எதிர்ப்பையும் சுட்டிக்காட்டிய பிரதமர், வெளிப்புற அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், வளர்ச்சியி நோக்கிய நாட்டின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தினார். "நாம் பாதுகாப்பாக இருப்பது மட்டுமின்றி, வளர்ச்சியின் புதிய மைல்கற்களையும் உருவாக்கி வருகிறோம். நாம்  தற்சார்பு இந்தியா இயக்கத்தை முன்னெடுத்துச் செல்கிறோம். நாம் மிகவும் நவீன உள்கட்டமைப்பை உருவாக்கி வருகிறோம்," என்று திரு மோடி குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2256590&reg=3&lang=1  

----

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2292283) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Bengali-TR , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam