பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இயற்கை மீதான மரியாதை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அவசியத்தை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்

प्रविष्टि तिथि: 30 JUL 2026 10:26AM by PIB Chennai

இயற்கை, சுற்றுச்சூழல், ஒட்டுமொத்த படைப்பின் மீதான மரியாதை, வாழ்க்கையில் மிக அடிப்படையான அம்சம் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். ஆரோக்கியமான, வளமான, வலிமையான நாட்டை கட்டமைப்பது இயற்கையின் மீதான நன்றியுணர்வுடனும், தன்னலமற்ற சேவை மனப்பான்மையுடனும் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் இது குறித்த சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் பகிர்ந்துகொண்டுள்ளார்.

படைப்பின் தொடக்கமாக போற்றப்படும் தியுலோகமும் (சொர்க்கம்), பூமியும் என்றென்றும் மங்களகரமானதாக திகழட்டும் என்று இந்த சமஸ்கிருத சுபாஷிதம் எடுத்துரைக்கிறது. பூமிக்கும், சூரியனுக்கும் உள்ள இடைவெளி, நம் அனைவரது வாழ்க்கைக்கும் நன்மை அளிக்கக் கூடியதாகவும், அறிவொளி தருவதாகவும் அமையட்டும். அனைத்து மருத்துவ மூலிகைகளும், வன தாவரங்களும் நம் அனைவருக்கும் உடல் ஆரோக்கியத்தையும், வலிமையையும், மகிழ்ச்சியையும் அளிக்கட்டும். அனைத்து இடங்களிலும் நிறைந்திருப்பவரும், அனைத்து உலகங்களுக்கும் அதிபதியுமான பகவான், நம் அனைவருக்கும் நல்வாழ்வையும், அமைதியையும், வளத்தையும் வழங்கட்டும். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291519&reg=3&lang=1

***

TV/SV/RJ/SH

 


(रिलीज़ आईडी: 2291555) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Gujarati , Telugu , Kannada , Malayalam