நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மண்டல கிராமப்புற வங்கிகள் முன்னெப்போதும் இல்லாத அளவில், கடந்த நிதியாண்டில் ரூ. 10,177 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளன

प्रविष्टि तिथि: 28 JUL 2026 3:29PM by PIB Chennai

தேசிய, மண்டல அளவில், மண்டல கிராமப்புற வங்கிகளின் செயல்பாடு, நிதிசார் நிலையை மத்திய அரசு தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.

கடந்த நான்கு நிதியாண்டுகளில், மத்திய நிதியமைச்சர் தலைமையில், தமிழகத்தில், 04.08.2023 அன்று சென்னையில், மண்டல கிராமப்புற வங்கிகள் குறித்த ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.

மேலும், இதன் தொடர்ச்சியாக, நிதிச் சேவைகள் துறை பல்வேறு நிலைகளில், மண்டல கிராமப்புற வங்கிகள், அவற்றை ஊக்குவிக்கும் வங்கிகளுடன் அவ்வப்போது வழக்கமான ஆய்வுக் கூட்டங்களும் நடத்தப்பட்டு  வருகிறது.

இத்தகைய ஆய்வுக் கூட்டங்களுக்கான நிகழ்ச்சி நிரலில்,

i) நிதி அளவீடுகளின் அடிப்படையில் மண்டல கிராமப்புற வங்கிகளின் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுகள்

ii) தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்தல்.

iii) குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சார்ந்த கடன் பிரிவில், கவனம் செலுத்துதல்.

iv) விவசாயம் சார்ந்த துறைகள், எம்எஸ்எம்இ, சில்லறை வர்த்தகத் துறைகளுக்குக் கடன் வழங்குவதை விரிவுபடுத்துவதற்கு முக்கியத்துவம் அளித்தல்.

v) கிராமப்புற, தொலைதூரப் பகுதிகளில் நிதிச் சேவைகளைச் சென்றடையச் செய்வதற்கான நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல்,

ஆகியவை இதில் அடங்கும்.

அண்மை ஆண்டுகளில் மண்டல கிராமப்புற வங்கிகளின்  நிதி நிலைமை மேம்பட்டுள்ளது. 2025-26-ம் நிதியாண்டில் மண்டல கிராமப்புற வங்கிகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ. 10,177 கோடி என்ற அளவிலான நிகர லாபத்தை ஈட்டியுள்ளன. மூலதனம், இடர்பாட்டு எடை அடிப்படையிலான சொத்து விகிதம், வைப்புத்தொகைகள், கடன்கள், வராக்கடன், கடன்-வைப்புத்தொகை விகிதம் போன்ற முக்கிய நிதி சார்ந்த அளவீடுகளிலும்  மண்டல கிராமப்புற வங்கிகள் சீரான முன்னேற்றத்தைக் அடைந்துள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில், முக்கிய நிதி சார்ந்த அளவீடுகளில் இந்த வங்கிகளின் செயல்பாடுகள் முன்னேற்றம் கண்டுள்ளன.

 

மாநிலங்களவையில் இன்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு. பங்கஜ் சவுத்ரி இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290397&reg=3&lang=1

(Release ID: 2290397)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2290773) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , Bengali