பிரதமர் அலுவலகம்
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வல்லூரி அஜய பாபுவுக்குப் பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
28 JUL 2026 2:07PM by PIB Chennai
கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், பளுதூக்குதலில், ஆடவர் 79 கிலோ எடைப்பிரிவில், வெள்ளிப் பதக்கம் வென்ற வல்லூரி அஜய பாபுவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
'ஸ்னாட்ச்' பிரிவில், சாதனை படைத்துள்ள வல்லூரி அஜய பாபு, சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளதில் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
அவரது எதிர்கால முயற்சிகளுக்கு பிரதமர் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
பளுதூக்குதலில், இந்தியாவுக்கு மேலும் ஒரு பெருமை!
கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், பளுதூக்குதலில், ஆடவர் 79 கிலோ எடைப்பிரிவில், வல்லூரி அஜய பாபு வெள்ளிப் பதக்கம் வென்றதில் மகிழ்ச்சி. 'ஸ்னாட்ச்' பிரிவில் சாதனை படைத்து, அவர் சாதனைப் புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள். அவரது எதிர்கால முயற்சிகள் சிறக்கட்டும்.
(Release ID: 2290312)
***
TV/SV/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2290445)
வருகையாளர் எண்ணிக்கை : 40
இந்த வெளியீட்டை படிக்க:
Telugu
,
Kannada
,
Malayalam
,
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati