பிரதமர் அலுவலகம்
கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பளுதூக்குதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஞானேஸ்வரி யாதவிற்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
27 JUL 2026 8:17PM by PIB Chennai
கிளாஸ்கோ 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பளுதூக்குதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஞானேஸ்வரி யாதவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார்.
ஞானேஸ்வரி யாதவ், இந்தப் போட்டியில் தனது தனிப்பட்ட சிறந்த சாதனையைப் பதிவு செய்துள்ளதால், இந்த வெற்றி இன்னும் குறிப்பிடத்தக்கது என்று திரு மோடி குறிப்பிட்டார். அவரது வெற்றி, இந்திய இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், அவரது எதிர்கால முயற்சிகள் வெற்றிபெறவும் வாழ்த்தினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:
“கிளாஸ்கோ 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஞானேஸ்வரி யாதவிற்கு வாழ்த்துகள். இந்தப் போட்டியில் அவர் தனது தனிப்பட்ட சிறந்த சாதனையைப் பதிவு செய்திருப்பது, இந்த வெற்றியை மேலும் குறிப்பிடத்தக்கதாக ஆக்குகிறது. அவரது வெற்றி, இந்தியாவின் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கட்டும். அவரது எதிர்கால முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
#CWG2026”
****
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2290188)
வருகையாளர் எண்ணிக்கை : 40
இந்த வெளியீட்டை படிக்க:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada