விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாம் தவணை நிதியைப் பெறத் தகுதிபெற்ற முதல் மாநிலமாக மகாராஷ்டிரா உருவெடுத்துள்ளது - மத்திய வேளாண் அமைச்சர் பாராட்டு

प्रविष्टि तिथि: 27 JUL 2026 2:51PM by PIB Chennai

தேசிய வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட நிதியின் பயன்பாடு குறித்தும், மகாராஷ்டிரா மாநிலத்திற்கு இரண்டாம் தவணையாக  நிதி வழங்குவது குறித்தும், மத்திய வேளாண் அமைச்சர் திரு. சிவராஜ் சிங் சௌஹான் இன்று காணொளி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், வேளாண் துறை இணையமைச்சர் திரு. தத்தாத்ரே பாரனே, மத்திய  வேளாண் துறையின் மூத்த அதிகாரிகள், மகாராஷ்டிரா மாநில அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தத் ஆய்வின் போது, தேசிய வேளாண் மேம்பாட்டுத்  திட்டத்தின் கீழ், அம்மாநிலத்திற்கு ஏற்கனவே முதல் தவணையாக ரூ. 335 கோடியை மத்திய அரசு விடுவித்திருந்ததை அமைச்சர் சுட்டிக்காட்டினார். நிர்ணயிக்கப்பட்ட அளவுகோலைக் கடந்து, ரூ. 260 கோடி நிதியை (75 சதவீத நிதி), அம்மாநில அரசுப் பயன்படுத்தியுள்ளது. இதன் மூலம், இரண்டாம் தவணையாக, இத்திட்டத்திற்கான நிதியைப் பெற அம்மாநிலம் தகுதி பெற்றுள்ளது. ரூ. 335 கோடி மதிப்பிலான இரண்டாம் தவணை நிதியை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

சிறப்பாக செயல்பட்டு வரும் மகாராஷ்டிரா மாநில அரசிற்குப் பாராட்டு தெரிவித்த அமைச்சர் திரு. சௌஹான், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள், தேசிய வெள்ளி மேம்பாட்டுத் திட்டத்திற்கான நிதியில், 75 சதவீதத்திற்கும் கூடுதலாகப் பயன்படுத்தியுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சர் திரு. சிவராஜ் சிங் சௌஹான்  குறிப்பிட்டார். 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289845&reg=3&lang=1

 

***

TV/SV/KR


(रिलीज़ आईडी: 2289878) आगंतुक पटल : 19
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati