பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மத்திய ரிசர்வ் காவல் படையின் நிறுவன தினத்தை முன்னிட்டு அனைத்து வீரர்களுக்கும் பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 27 JUL 2026 2:13PM by PIB Chennai

மத்திய ரிசர்வ் காவல் படையின் நிறுவன தினத்தை முன்னிட்டு, அப்படையைச் சேர்ந்த அனைத்து வீரர்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அசாத்திய துணிச்சல், கடமை உணர்வு ஆகிய பண்புகள் மூலம் மத்திய ரிசர்வ் காவல் படை தனித்துவ சிறப்பைப் பெற்றுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்வது முதல் சவாலான சூழல்களில் மக்களுக்குச் சேவை செய்வது வரை, மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்கள் எப்போதும் நாட்டின் நலனுக்கு  முன்னுரிமை அளித்து வந்துள்ளதை பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். மாவோயிச தீவிரவாத அச்சுறுத்தலை முடிவிற்கு கொண்டு வருவதில், சிபிஆர்எப் வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை என்றும், அவை பலரது வாழ்வில், அமைதிமுன்னேற்றத்திற்குப் பெரிதும் பங்களித்துள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

மத்திய ரிசர்வ் காவல் படையின் நிறுவன தினத்தை முன்னிட்டு, அப்படையைச் சேர்ந்த அனைத்து  வீரர்களுக்கும் வாழ்த்துகள். அசாத்திய துணிச்சல், கடமை உணர்வு ஆகிய பண்புகள் மூலம், காவலர்கள் தனித்துவ சிறப்பைப் பெற்றுள்ளனர். உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்வது முதல் சவாலான சூழல்களில் மக்களுக்குச் சேவை செய்வது வரை, மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்கள், எப்போதும் நாட்டின் நலனுக்கு முன்னுரிமை அளித்து வந்துள்ளனர். மாவோயிச தீவிரவாத  அச்சுறுத்தலை முடிவிற்கு கொண்டு வருவதில், அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. அவை பலரது வாழ்வில் அமைதி, முன்னேற்றத்திற்குப் பங்களித்துள்ளன.

 

***

(Release ID: 2289828)

TV/SV/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2289852) வருகையாளர் எண்ணிக்கை : 41