மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் - மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

இடுகை இடப்பட்ட நாள்: 26 JUL 2026 2:00PM by PIB Chennai

மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி இன்று (26.07.2026) கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார். மேலும், நுகர்வோர் விவகாரங்கள், உணவு பொது விநியோகம்,  புதிய - புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய மத்திய அமைச்சகங்களின் பொறுப்புகளையும் அவர் வகிக்கிறார்.

திரு ஜோஷி அமைச்சகத்தின் ஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். அதில் அவர் கல்வி அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்கள், இதர முன்முயற்சிகளின் செயலாக்கத்தை ஆய்வு செய்தார். மத்திய கல்வித்துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரியும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

உயர்கல்வித் துறை செயலாளர் டாக்டர் வினீத் ஜோஷி, பள்ளிக் கல்வி - எழுத்தறிவுத் துறை செயலாளர் திரு டி.கே. அனில் குமார் ஆகியோரும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் உடனிருந்தனர்.

***

(Release ID: 2289586)

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2289601) வருகையாளர் எண்ணிக்கை : 51
இந்த வெளியீட்டை படிக்க: Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam