பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பிரதமர் நன்றி

இடுகை இடப்பட்ட நாள்: 26 JUL 2026 9:48AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (26.07.2026), கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, நாட்டைப் பாதுகாப்பதில் தங்களின் அசாதாரண துணிச்சலையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்திய துணிச்சல் மிக்க வீரர்களுக்கு நமது தேசம் நன்றியைத் தெரிவிக்கிறது என்று கூறியுள்ளார்.

மிகவும் கடுமையான சூழ்நிலைகளை எதிர்கொண்டபோதும் அவர்கள் காட்டிய வீரம், என்றென்றும் தேசியப் பெருமையின் ஆதாரமாக நிலைத்திருக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அவர்களின் அசைக்க முடியாத தேசபக்தியும் கடமையுணர்வும் வரும் தலைமுறைகளுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"இந்தியாவைப் பாதுகாப்பதில் நமது வீரர்கள் காட்டிய அபாரமான துணிச்சலுக்கும் அர்ப்பணிப்புக்கும், கார்கில் வெற்றி தினத்தில், நமது தேசம் அந்த வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கிறது. மிகவும் கடுமையான சூழல்களுக்கு மத்தியிலும் அவர்கள் காட்டிய வீரம், என்றென்றும் தேசியப் பெருமையின் அடையாளமாக நிலைத்திருக்கும். அவர்களின் அசைக்க முடியாத தேசபக்தியும் கடமையுணர்வும் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து ஊக்கமளிக்கும்.

***

(Release ID: 2289533)

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2289572) வருகையாளர் எண்ணிக்கை : 50