குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் வளர்ச்சி நடவடிக்கைகளில் தொடர்ந்து பங்கேற்பாளர்களாக இந்திய வம்சாவளியினர் இருக்க வேண்டும் - குடியரசுத் தலைவர்

प्रविष्टि तिथि: 25 JUL 2026 7:07PM by PIB Chennai

ருமேனியாவில் மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின்  நிறைவு நாளான ஜூலை 25, 2026 அன்று, புக்கரெஸ்டில் உள்ள இந்தியத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்ச்சியில், இந்திய வம்சாவளியினரிடையே குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் அவருடன் மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை இணையமைச்சர் திருமதி நிமுபென் ஜெயந்திபாய் பம்பானியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் தினேஷ் சர்மா, திரு விஜய் பாகேல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ருமேனியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரின் உற்சாகம் மிகுந்த கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், இந்தியாவிலிருந்து வெகு தொலைவில் உள்ள நாடுகளில் வசித்து வந்த போதிலும், தங்கள் தாய்நாட்டுடன் வலுவான பிணைப்பைக் கொண்டுள்ளனர் என்று கூறினார். அவர்களின் சாதனைகளும், இந்தியாவின் மீதான அன்பும் ஒவ்வொரு இந்தியரையும் பெருமை கொள்ளச் செய்வதாக அவர் கூறினார். இந்திய நிறுவனங்களும், துறை சார்ந்த  நிபுணர்களும், ருமேனியாவின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதுடன், இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பிற்கான புதிய வாய்ப்புகளையும் உருவாக்குவதில் மகிழ்ச்சி அடைவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தியா-ருமேனியா இடையேயான உறவுகளின் மிக வலுவான தூணாக, இரு நாடுகளின் மக்களுக்கு இடையே  நெருக்கமான பிணைப்பு திகழ்கிறது என்று குடியரசுத் தலைவர் கூறினார். ருமேனியாவில் இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்துக் கொண்டு, இந்திய வம்சாவளியினர் ஒற்றுமையுடன் திகழ்வதையும், அதே வேளையில் புதிய தலைமுறை இந்தியத் தகவல் தொழில்நுட்பப் பொறியாளர்கள், அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், சுகாதார நிபுணர்கள், மாணவர்கள் தற்போது ருமேனியாவைத் தங்களது இல்லமாக மாற்றிக்கொள்வதையும் கண்டு அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

ருமேனியாவின் பொருளாதாரம், சமூகத்திற்கு இந்திய வம்சாவளியினர் அளிக்கும் பங்களிப்பும், அங்கு இந்திய கலாச்சாரம், விழுமியங்களை மேம்படுத்துவதற்கான அவர்களின் முயற்சிகளும், இந்தியாவின் உண்மையான பிரதிநிதிகளாக உருவெடுக்கச் செய்துள்ளன என்று குடியரசுத் தலைவர் கூறினார். கடின உழைப்பு, திறமை,  அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம், இந்திய வம்சாவளியினர் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளனர். இந்தியச் சமூகத்தை வரவேற்று அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ததற்காக, ருமேனியா அரசையும், அந்நாட்டு மக்களையும் அவர் பாராட்டினார்.

வளமான, நவீன, தன்னிறைவு பெற்ற, அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவதே வளர்ச்சியடைந்த இந்தியா குறித்த நமது தொலைநோக்குப் பார்வையாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். இந்தியாவின் வளர்ச்சி நடவடிக்கைகளில் தொடர்ந்து பெங்கேற்க வேண்டும் என்று அந்நாட்டில் உள்ள இந்திய வம்சாவளியினரை குடியரசுத் தலைவர் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289427&reg=3&lang=1

****

TV/SV/RJ


(रिलीज़ आईडी: 2289448) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Telugu , Malayalam