குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

புக்காரெஸ்ட் பொருளாதார ஆய்வுகள் பல்கலைக்கழகம் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது

இடுகை இடப்பட்ட நாள்: 24 JUL 2026 11:01PM by PIB Chennai

ருமேனியாவின் புக்காரெஸ்ட் நகரில் ஜூலை 24, 2026 அன்று நடைபெற்ற ஒரு விழாவில், புக்காரெஸ்ட் பொருளாதார ஆய்வுகள் பல்கலைக்கழகம், குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவுக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்தது.

குடியரசுத் தலைவர் தனது ஏற்புரையில், இந்த அங்கீகாரத்திற்காக புக்காரெஸ்ட் பொருளாதார ஆய்வுகள் பல்கலைக்கழகத்திற்கு நன்றி தெரிவித்தார். இந்தியா - ருமேனியா மக்களின் நீடித்த நட்பின் பிரதிபலிப்பாக இந்த கௌரவத்தை ஏற்றுக்கொள்வதாக அவர் கூறினார்.

தன் வாழ்வில் கல்வியே மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சக்தியாக இருந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்கல்வி என்பது தனிநபரின் முன்னேற்றத்திற்கான ஒரு சாதனம் மட்டுமல்ல எனவும் அது அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தின் அடித்தளம் என்றும் அவர் கூறினார்.

செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், பிற விரைவான அறிவியல் முன்னேற்றங்களால் இன்று உலகம் மறுவடிவம் பெற்று வரும் நிலையில், ஞானம், அறநெறி, கருணை ஆகியவை சார்ந்த கல்வியை வழிநடத்துவதை உறுதிசெய்யும் பெரும் பொறுப்பு பல்கலைக்கழகங்களுக்கு உள்ளது என்று குடியரசு தலைவர் திருமதி திரௌபதி முர்மு கூறினார்.

மேலும் விவரங்களுக்கு ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2289265&reg=3&lang=1

***

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2289349) வருகையாளர் எண்ணிக்கை : 28
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Assamese , Punjabi , Gujarati , Telugu , Malayalam