தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஓடிடி தளங்கள், சமூக ஊடகங்களின் சட்டப்பூர்வ கடமைகள்: தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021-ன் கீழ் மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தல்

प्रविष्टि तिथि: 24 JUL 2026 4:19PM by PIB Chennai

தகவல் தொழில்நுட்பச் சட்டம்2000-ன் கீழ் இடைநிலை வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறை விதிகள் 2021’-ஐ மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த விதிகளின் பகுதி III-ன் கீழ்ஓடிடி தளங்கள் உள்ளிட்ட இணையவழித் தொகுப்பு உள்ளடக்கப் பதிப்பாளர்கள்நடைமுறையில் உள்ள சட்டங்களால் தடைசெய்யப்பட்ட எந்தவொரு உள்ளடக்கத்தையும் ஒளிபரப்பக் கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்கள் உள்ளிட்ட இடைநிலையாளர் தளங்களில் பயனர்களால் உருவாக்கப்படும் உள்ளடக்கங்கள் குறித்துதகவல் தொழில்நுட்ப விதிகளின் பகுதி II-ன் கீழ் உரிய கவனத்துடன் செயல்படுவதற்கான குறிப்பிட்ட சட்டப்பூர்வ கடமைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமான எந்தவொரு தகவலையும் தங்களது கணினி வளங்களில் காட்சிப்படுத்துதல்பதிவேற்றுதல்சேமித்தல்பரப்புதல் அல்லது வெளியிடுதல் ஆகியவற்றைத் தவிர்க்க இடைநிலை நிறுவனங்கள் தாங்களாகவே தகுந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும்தங்களது பயனர்களையும் அவ்வாறு செய்ய வைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில்தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288881&reg=3&lang=1

***

SS/SE/SH


(रिलीज़ आईडी: 2289166) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , Malayalam , English , Marathi , हिन्दी , Gujarati , Kannada