ரெயில்வே அமைச்சகம்
தென்கிழக்கு ரயில்வேயின் நிம்புரா மேற்கு அவுட்டர் கேபின்-மிட்னாபூர் இடையே அமையவுள்ள ரூ.440 கோடி மதிப்பிலான மூன்றாவது வழித்தடத் திட்டத்திற்கு இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது
प्रविष्टि तिथि:
23 JUL 2026 12:05PM by PIB Chennai
நாட்டின் முக்கிய சரக்குப் போக்குவரத்து வழித்தடங்கள் ஒன்றில் ரயில் திறனை மேம்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, தென்கிழக்கு ரயில்வேயில் உள்ள நிம்புரா மேற்கு அவுட்டர் கேபின் - மிட்னாபூர் இடையே ரூ.440 கோடி செலவில் 14.52 கி.மீ நீளமுள்ள மூன்றாவது வழித்தடம் அமைக்க இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.
பயணிகள் ரயில்கள், சரக்கு ரயில்கள் ஆகியவற்றின் விரைவான இயக்கத்தை எளிதாக்குவதற்கும், அதேவேளையில் தொழிற்சாலைகள், அத்தியாவசியப் பொருட்களின் அதிகரித்து வரும் போக்குவரத்துத் தேவைகளுக்கு ஆதரவளிப்பதற்கும், அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள வழித்தடங்களில் திறனை அதிகரிப்பதற்குமான இந்திய ரயில்வேயின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் அமைகிறது.
இந்த வழித்தடத்தில் பயணிகள் மற்றும் மாங்கனீசு, இரும்புத் தாது, கொள்கலன்கள், நிலக்கரி, இரும்பு, எஃகு, கோதுமை, உப்பு, அரிசி, பெட்ரோலியப் பொருட்கள், சுண்ணாம்புக்கல், ஜிப்சம், உரங்கள், சமையல் எண்ணெய், ரசாயன உப்பு, கரி, சிமெண்ட், சாம்பல் உள்ளிட்ட முக்கியப் பொருட்களைக் கொண்டுசெல்லும் கணிசமான சரக்குப் போக்குவரத்து நடைபெறுகிறது.
இந்தத் திட்டம் நிறைவடையும்போது, ஆண்டுக்குக் கூடுதலாக 3.52 மில்லியன் டன் சரக்குப் போக்குவரத்தை எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு, அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்தை மேம்படுத்தி, செயல்பாட்டுத் தடைகளைக் குறைத்து, முக்கியமான இந்த ரயில் வழித்தடத்தைச் சார்ந்துள்ள தொழில்களுக்கும் வணிகங்களுக்குமான இணைப்பை வலுப்படுத்தும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288187®=3&lang=1
***
SS/SMB/SH
(रिलीज़ आईडी: 2288677)
आगंतुक पटल : 5