வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
ஜெனீவாவின் உலக வர்த்தக அமைப்பில் எட்டாவது வர்த்தகக் கொள்கை ஆய்வை இந்தியா நிறைவு செய்தது
प्रविष्टि तिथि:
23 JUL 2026 8:49PM by PIB Chennai
ஜெனிவாவில் உள்ள உலக வர்த்தக அமைப்பில் (WTO), இந்தியாவின் எட்டாவது வர்த்தகக் கொள்கை ஆய்வின் (TPR) இரண்டாவது மற்றும் இறுதி அமர்வு இன்று நிறைவடைந்தது. எட்டாவது வர்த்தகக் கொள்கை ஆய்வுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வக் குழுவிற்கு வர்த்தகச் செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், சீர்திருத்தம் என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறை என்பதை உறுதிப்படுத்தினார். மேலும், திறந்த, வெளிப்படையான மற்றும் கணிக்கக்கூடிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு முறைமைக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அவர் எடுத்துரைத்தார்.
உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட பிரச்சினைகளுக்குப் பதிலளித்த வர்த்தகச் செயலாளர், இந்தியாவின் வர்த்தகக் கொள்கைகள் உலக வர்த்தக அமைப்புக்கு இணக்கமான கொள்கைகளால் வழிநடத்தப்படுவதுடன், ஒரு பெரிய வளரும் பொருளாதாரத்தின் வளர்ச்சித் தேவைகளையும் சமநிலைப்படுத்துகின்றன என்று கூறினார். இந்தியாவின் வேளாண்மைத் தீர்வைக் கட்டமைப்பு, நேர்மையையும், சமத்துவத்தையும் உறுதிசெய்து, லட்சக்கணக்கான சிறு, குறைந்த வருமானம் ஈட்டும் மற்றும் போதிய வளமில்லா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், அதே நேரத்தில் தொழில்துறைத் தீர்வைகள், மாறிவரும் உலகப் பொருளாதாரச் சூழலில் விநியோகச் சங்கிலியின் மீள்திறன், பன்முகப்படுத்தல் மற்றும் உள்நாட்டு உற்பத்தித் திறன்களை ஆதரிக்கின்றன என்றும் அவர் வலியுறுத்தினார்.
நிலையான வளர்ச்சியை ஊக்குவித்தல், பெண்களின் பொருளாதார மேம்பாடு, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, அறிவுசார் சொத்துரிமை சீர்திருத்தங்கள், சேவைகள் வர்த்தகம், முதலீட்டு வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் தொழில் செய்வதை எளிதாக்குதல் ஆகியவற்றில் இந்தியாவின் தொடர்ச்சியான முயற்சிகளை செயலாளர் அடிகோடிட்டுக் காட்டினார். நிதி உள்ளடக்கம், டிஜிட்டல் வர்த்தகம், தளவாட நவீனமயமாக்கல் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றில் இந்தியா அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிப்பிட்ட அவர், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் புத்தாக்கத்தால் இயக்கப்படும் வளர்ச்சி மாதிரிக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288607®=3&lang=1
****
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2288675)
आगंतुक पटल : 8