மக்களவை செயலகம்
azadi ka amrit mahotsav

பால கங்காதர திலகருக்கு மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா மலர் அஞ்சலி

प्रविष्टि तिथि: 23 JUL 2026 6:55PM by PIB Chennai

லோக்மான்ய பாலகங்காதர திலகரின் பிறந்தநாளை முன்னிட்டு, மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா இன்று (23.07.2027) நாடாளுமன்ற மைய மண்டபத்தில் உள்ள அவரது உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

 

நாடாளுமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோரும் லோகமான்ய பாலகங்காதர திலகருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மக்களவைச் செயலாளர் திரு உத்பால் குமார் சிங்கிம் பாலகங்காதர திலகருக்கு அஞ்சலி செலுத்தினார்.

 

'லோக்மான்யர்' எனப் பரவலாக அறியப்பட்ட பாலகங்காதர திலகர், மாபெரும் தேசபக்தராகவும், தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், அறிஞராகவும் திகழ்ந்தார். சுதந்திரப் போராட்டத்தின் போது மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அவர் ஒரு முன்னோடிப் பங்காற்றினார்.  “சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்!” என்ற அவரது எழுச்சியூட்டும் முழக்கம், தலைமுறை தலைமுறையாக இந்தியர்களை காலனி ஆதிக்கத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழத் தூண்டியது.

 

நாட்டிற்கு லோக்மான்ய திலகர் ஆற்றிய பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக, அவரது உருவப்படம் 28 ஜூலை 1956 அன்று, அப்போதைய பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவால் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் திறந்து வைக்கப்பட்டது.

 

மேலும் விவரங்களுக்கு இன் ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288486&reg=3&lang=1

(Release ID : 2288486)

****

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2288627) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati