ரெயில்வே அமைச்சகம்
தமிழ்நாட்டில் 98.3% அளவிற்கு ரயில் வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளன – ரயில்வே அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ்
प्रविष्टि तिथि:
22 JUL 2026 1:01PM by PIB Chennai
இந்திய ரயில்வேயில் மின்மயமாக்கல் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதுவரை 99.6% அளவிற்கு அகல ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் மின்மயமாக்கல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
2014-ம் ஆண்டிற்கு முன்பு வரை சுமார் 60 ஆண்டுகளில் 21,801 கி.மீ அளவிற்கு ரயில் வழித்தடம் மின்மயமாக்கப்பட்டது 2014-ம் ஆண்டு முதல் 2026-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 48,072 கீ.மி அளவிற்கு மின்மயமாக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து புதிய வழித்தடம், பல்தட திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு மின்மயமாக்கல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ரயில் வழித்தடங்களை மின்மயமாக்கும் பணிகளில் இந்திய ரயில்வே உலகில் விரைவாக அமல்படுத்தும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. பல்வேறு நாடுகள் பயணிகள் நெரிசல்மிக்க மற்றும் சரக்கு போக்குவரத்து வழித்தடங்களில் மட்டும் மின்மயமாக்குவதற்கு முன்னுரிமை அளித்து வருகின்றன. இந்தியாவில் அகல ரயில் பாதை முழுவதும் மின்மயமாக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
2025 ஜூன் மாதத்தில் சர்வதேச ரயில்வே யூனியன் வெளியிட்ட அறிக்கையின்படி, சுவிட்சர்லாந்தில் ரயில் வழித்தடம் 100% மின்மயமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 99.6%, சீனாவில் 82% ஸ்பெயினில் 67%, ஜப்பானில் 64%, பிரான்சில் 60%, பிரிட்டனில் 39% அளவிற்கு ரயில் வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.
மத்திய ரயில்வே, கிழக்கு கடலோர ரயில்வே, கிழக்கு மத்திய ரயில்வே, கிழக்கு ரயில்வே, கொங்கன் ரயில்வே, கொல்கத்தா மெட்ரோ, வடக்கு மத்திய ரயில்வே, வடகிழக்கு ரயில்வே, வடக்கு ரயில்வே, தெற்கு மத்திய ரயில்வே, தெற்கு கடலோர ரயில்வே, தென்கிழக்கு மத்திய ரயில்வே, தென்கிழக்கு ரயில்வே, மேற்கு மத்திய ரயில்வே, மேற்கு ரயில்வே ஆகிய மண்டலங்களில் 100% மின்மயமாக்கப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வேயில் 98.7%, தென்மேற்கு ரயில்வேயில் 96.1% அளவிற்கு மின்மயமாக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் 98.3% அளவிற்கு ரயில் வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.
இத்தகவலை ரயில்வே, தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் மக்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போது தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287573®=3&lang=1
****
TV/IR/GS/SH
(रिलीज़ आईडी: 2288078)
आगंतुक पटल : 6