ஆயுஷ்
azadi ka amrit mahotsav

ராணுவம், கள மருத்துவமனைகளில் ஆயுஷ் மருத்துவ சிகிச்சைக்கான சேவைகளை விரிவுபடுத்த வேண்டும்- மத்திய அமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் வேண்டுகோள்

प्रविष्टि तिथि: 22 JUL 2026 11:37AM by PIB Chennai

ராணுவம், கள மருத்துவமனைகளில் ஆயுஷ் மருத்துவ சிகிச்சைக்கான புறநோயாளிகள் பிரிவுகளை அமைப்பதற்கும், சிகிச்சைக்கான சேவைகளை வழங்குவதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் கேட்டுக்கொண்டுள்ளார். 

இது தொடர்பாக, பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கிற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் பல்வேறு சவாலான பணிச் சூழல்களில் சேவையாற்றிவரும் வீரர்களுக்கு சுகாதார சேவைகளை வழங்குவதில் பாதுகாப்பு படையின் மருத்துவ சேவை பிரிவு முக்கிய பங்கு வகிப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆயுதப்படைகள் வலுவான நவீன மருத்துவ கட்டமைப்பை கொண்டிருக்கும்போதிலும் நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறைகளை அவற்றுடன் இணைப்பது பாதுகாப்புப் படைவீரர்களுக்கான நோய்த் தடுப்பு, சுகாதார மேம்பாடு, முழுமையான சுகாதார பராமரிப்பை  வலுப்படுத்துமென்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ், செயல்பட்டு வரும் ஒருசில மருத்துவமனைகளில் ஆயுஷ் சிகிச்சைக்கான வசதிகள் உள்ளதென்றும் எனினும், ஏராளமான ராணுவ கள மருத்துவமனைகளில் பிரத்யேக ஆயுஷ் மருத்துவ சேவைகள் தற்போது செயல்பாட்டில் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ராணுவ மருத்துவமனைகளில் ஆயுஷ் மருத்துவ சேவைக்கான வசதிகளை விரிவுபடுத்துவது, நோய்த் தடுப்பு, வாழ்வியல் பராமரிப்பு, மறுவாழ்வு, ஒட்டுமொத்த நலவாழ்வு அடிப்படையிலான சுகாதார சேவைகளைப் பெற ராணுவ வீரர்களுக்கு வழிவகுக்கும் என்று  அமைச்சர் தெரிவித்தார்.

பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறையுடன் நோயாளிகளை அடிப்படையாகக் கொண்ட விரிவான ஆயுஷ் மருத்துவ சேவைகளையும் வழங்க இது வகைசெய்யும் என்று அவர் தெரிவித்தார். மேலும், நாட்டின் பொது சுகாதார சேவைகளுடன் பாரம்பரியமிக்க மருத்துவச் சேவைகளை ஒருங்கிணைப்பதற்கு இது வழிவகுக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து ராணுவ, கள மருத்துவமனைகளில் ஆயுஷ் மருத்துவமனையின் கீழ், புறநோயாளிகளுக்கான பிரிவை ஏற்படுத்த வேண்டுமென்ற முன்மொழிவை பாதுகாப்பு அமைச்சகம் பரிசீலனை செய்யவேண்டுமென்று திரு பிரதாப்ராவ் ஜாதவ் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287546&reg=3&lang=1

***

SS/SV/SU/KR

 


(रिलीज़ आईडी: 2287667) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Gujarati