உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஓய்வுபெற்ற அக்னிவீரர்களுக்கான இடஒதுக்கீடு

प्रविष्टि तिथि: 21 JUL 2026 4:05PM by PIB Chennai

மத்திய ஆயுதக் காவல் படைகள் மற்றும் அஸ்ஸாம் ரைபிள்ஸ் ஆகிய படைகளில், காவலர் மற்றும் ரைபிள்மேன் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பில் 'முன்னாள் அக்னிவீரர்' எனும் புதிய பிரிவை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

 

இப்பிரிவின் கீழ் முன்னாள் அக்னிவீரர்களுக்குக் காலியிடங்களில் 50% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மேலும், நிர்ணயிக்கப்பட்ட உச்ச வயதில் 3 ஆண்டுகள் தளர்வும், முதல் தொகுதியைச் சேர்ந்த முன்னாள் அக்னிவீரர்களுக்கு உச்ச வயதில் 5 ஆண்டுகள் தளர்வும் அளிக்கப்படுகிறது. அத்துடன் உடல்தகுதித் தேர்வு, உடல்திறன் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வுகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

 

முன்னாள் அக்னிவீரர்களின் அடுத்தகட்ட பணி முன்னேற்றத்தை ஒருங்கிணைக்கும் நோக்கில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் முன்னாள் அக்னிவீரர்களுக்கான தனிப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்ட அக்னிவீரர்கள் தங்களின் பணிக்காலத்தை இன்னும் நிறைவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

இத்தகவலை மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287043&reg=3&lang=1

****

TV/SE/SH


(रिलीज़ आईडी: 2287480) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी