சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
ஆரவல்லி மலைத்தொடர்கள் தொடர்பான விவகாரங்களில் பொதுமக்களின் கருத்தை அறிவதற்கு உயர்மட்ட குழுவை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது
प्रविष्टि तिथि:
21 JUL 2026 11:07AM by PIB Chennai
ஆரவல்லி மலைத்தொடர்கள், அதன் தொடர்பான விவகாரங்களை ஆய்வு செய்ய உயர்மட்டக் குழு ஒன்றை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது. இக்குழு 2026 ஆகஸ்ட் 31 க்கு முன்பாக விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து தில்லி, ராஜஸ்தான், ஹரியானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர், சுற்றுச்சூழலியலாளர்கள், இயற்கை பாதுகாவலர்கள், லாபநோக்கமற்ற அமைப்புகள், சுரங்க குத்தகைதாரர்கள், திட்ட அமைப்பாளர்கள், கிராமத்தினர், விவசாயிகள், சுரங்க தொழிலாளர்கள், அப்பகுதியின் வாழ்வாதாரம், நலவாழ்வு ஆகியவற்றுடன் தொடர்புடைய உள்ளுர் சமூகத்தினர் உள்ளிட்டோரிடமிருந்து கருத்துக்கள், ஆலோசனைகள், தகவல்களை ஆகியவற்றை குழு வரவேற்கிறது.
அனைத்து தரப்பினரும் தங்கள் கருத்துக்களை ஆவண சான்றுகள் அல்லது இதர சரிபார்க்ககூடிய ஆதாரங்களுடன் இணைத்து mshpcaravalli[at]gmail[dot]com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட https://forms.gle/FpWwXBES5Gfr9bn16 படிவம் மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட 21 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286899®=3&lang=1
***
SS/IR/SM/SH
(रिलीज़ आईडी: 2287455)
आगंतुक पटल : 8