சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தமிழ்நாட்டின் சுற்றுலாத் துறை உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.240 கோடிக்கும் அதிகமான நிதியுதவி: மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத்

प्रविष्टि तिथि: 21 JUL 2026 12:13PM by PIB Chennai

நாட்டின் சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்தவும்அடிப்படை வசதிகளை விரிவாக்கவும் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறதுநாடு முழுவதும் பல்வேறு  மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் 5,756.62 கோடி ரூபாய் மதிப்பிலான 117 திட்டங்களுக்கு சுற்றுலா அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதுஇதில் தமிழ்நாட்டின் சுற்றுலாத் துறை உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.240 கோடிக்கும் அதிகமான நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் நேற்று (20.07.2026) எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்த மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், தேசிய சுற்றுலா இயக்கம் 2.0-ன் ஒரு பகுதியான சவால் அடிப்படையிலான சுற்றுலாத்தலங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஆன்மீக சுற்றுலாப் பிரிவில் ராமேஸ்வரம் தீவை மேம்படுத்த 20.01 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க கடந்த நிதியாண்டில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பிரசாத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள 8 நவகிரகக் கோயில்களை மேம்படுத்துவதற்காக 40.94 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய நிறுவனங்களுக்கான உதவி திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் மின்விளக்கு அலங்காரம், அது சார்ந்த பணிகளை மேற்கொள்ள இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு 11.47 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முக்கிய சுற்றுலாத் தலங்களை உலகத் தரத்திற்கு உயர்த்தும் மூலதன முதலீட்டிற்கான மாநிலங்களுக்கான சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ் 2024-25-ல் தமிழ்நாட்டில் இரண்டு பெரிய அளவிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாமல்லபுரத்தில் நந்தவனம் பாரம்பரியப் பூங்கா அமைக்க 99.67 கோடி ரூபாயும், ஊட்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் பகுதியில் சூழல் பூங்கா அமைக்க 70.23 கோடி ரூபாய் நிதியும் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286914&reg=3&lang=1

 

***

SS/PD/SH

 


(रिलीज़ आईडी: 2287379) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali-TR , Bengali , Assamese , Gujarati