நிதி அமைச்சகம்
மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இணைந்து மேற்கொண்டு வரும் நிதி தொழில்நுட்பச் சூழலமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகள்
இடுகை இடப்பட்ட நாள்:
20 JUL 2026 4:41PM by PIB Chennai
நாட்டில் உள்ள டிஜிட்டல் கடன் வழங்கும் தளங்கள், பணம் செலுத்தும் ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட நிதி தொழில்நுட்பச் சூழலமைப்பு தொடர்பான சிக்கல்களை மறுஆய்வு செய்வதற்காக, மத்திய அரசும், நிதித்துறை ஒழுங்குமுறை அமைப்புகள், பிற சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்தகைய மறுஆய்வு மதிப்பீட்டின் அடிப்படையில், அவ்வப்போது பல்வேறு ஒழுங்குமுறை, மேற்பார்வை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ரிசர்வ் வங்கி, ஒழுங்குமுறைத் தர நிலைகளை நிறுவி அவற்றை அமல்படுத்துவதற்கும், நெறிமுறை சார்ந்த நடைமுறையை ஊக்குவிப்பதற்கும், சந்தையின் ஒருமைப்பாட்டை உறுதி செய்வதற்கும், தகராறுகளுக்குத் தீர்வு காண்பதற்கும், அதன் உறுப்பினர்களிடையே வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமையை வளர்ப்பதற்கும், நிதி தொழில்நுட்பத் துறையில் சுய-ஒழுங்குமுறை அமைப்புகளுக்கான கட்டமைப்பை30.05.2024 அன்று வெளியிட்டுள்ளது.
இணையவழி, மொபைல் செயலி வாயிலான அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக, ரிசர்வ் வங்கி பிப்ரவரி 2021-ல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைப் பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் குறித்த முதன்மை வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல் நெறிமுறைகள், இணையதளம், மொபைல் வங்கிச் சேவைகள், பற்று / கடன் அட்டைகள் மூலம் பணம் செலுத்துதல் போன்ற பல்வேறு பணம் செலுத்தும் வழி முறைகளுக்கு, வங்கிகள் ஒரு பொதுவான குறைந்தபட்ச பாதுகாப்பு கட்டுப்பாடுகளைச் செயல்படுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றன. மேலும், தேசிய பணப் பரிவர்த்தனைக் கழகம், யுபிஐ போன்ற பரிவர்த்தனைகளுக்காக, செயற்கை நுண்ணறிவு / எந்திர கற்றல் அடிப்படையிலான மாதிரிகளைப் பயன்படுத்தி, எச்சரிக்கைகளை உருவாக்கவும், பரிவர்த்தனைகளை நிராகரிக்கவும், அனைத்து வங்கிகளுக்கும் மோசடி கண்காணிப்பிற்கான தீர்வை வழங்குகிறது.
மக்களவையில், கேள்வி ஒன்றிற்கு மத்திய நிதி இணையமைச்சர் திரு பங்கஜ் சௌத்ரி இன்று எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286607®=3&lang=1
****
TV/SV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2286867)
வருகையாளர் எண்ணிக்கை : 38