நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ரூ. 37,500 கோடி மதிப்பிலான நிலக்கரிபழுப்பு நிலக்கரி வாயுவாக்கல் திட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டத்தில் தொழில்துறையின் தீவிர பங்கேற்பு

प्रविष्टि तिथि: 20 JUL 2026 5:33PM by PIB Chennai

ரூ. 37,500 கோடி மதிப்பிலான நிலக்கரி/பழுப்பு நிலக்கரி வாயுவாக்கல் திட்டங்களை ஊக்குவிக்கும்  திட்டத்திற்கான விண்ணப்பத்திற்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தை நிலக்கரி அமைச்சகம், கூடுதல் செயலாளர் திரு சனோஜ் குமார் ஜா தலைமையில் இன்று  நடத்தியது. பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தொழில்நுட்ப வழங்குநர்கள் மற்றும் விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். உள்நாட்டு நிலக்கரியை சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும் கூடுதல் மதிப்பு சேர்க்கும் வகையிலும் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் அரசின் இந்த முக்கிய முன்முயற்சியின் மீது துறையினர் கொண்டுள்ள வலுவான ஆர்வத்தை இது பிரதிபலிப்பதாக அமைந்தது.

இந்தக் கூட்டத்தின்போது, தகுதி வரம்புகள், மதிப்பீட்டு முறை, நிதி ஊக்கத்தொகைகள் மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறை ஆகியவற்றை உள்ளடக்கிய திட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் முன்மொழிவுக்கான கோரிக்கை குறித்த விரிவான விளக்கங்களை அமைச்சகம் முன்வைத்ததுடன், பங்கேற்பாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் விரிவான பதில்களை வழங்கியது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2286673&reg=3&lang=1

****

TV/RB/RJ


(रिलीज़ आईडी: 2286860) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , Gujarati , Bengali , English , Urdu , Telugu