வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலக வர்த்தக அமைப்பில், இந்தியாவின் 8-வது வர்த்தகக் கொள்கை மறுஆய்வுக் கூட்டம் - வர்த்தகத் துறை செயலாளர் திரு. ராஜேஷ் அகர்வால் தலைமையிலான இந்தியப் பிரதிநிதிகள் குழு பங்கேற்பு

प्रविष्टि तिथि: 20 JUL 2026 7:13PM by PIB Chennai

உலக வர்த்தக அமைப்பில், இந்தியாவின் 8-வது வர்த்தகக் கொள்கை மறுஆய்வு கூட்டம் 2026 ஜூலை 21, 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், வர்த்தகத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால் தலைமையிலான இந்தியப் பிரதிநிதிகள் குழு பங்கேற்கிறது.

இந்த மறுஆய்வுக் கூட்டம் இரண்டு முக்கிய ஆவணங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. மறுஆய்வுக்கு உட்படுத்தப்படும் உறுப்பு நாடுகள் சமர்ப்பிக்கும் கொள்கை அறிக்கை (அரசு அறிக்கை), அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் விநியோகிக்கப்படும் உலக வர்த்தக அமைப்பால் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஆகியவை இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்படும். உலக வர்த்தக அமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகளும் குறிப்பிட்ட கால இடைவெளியில், மறுஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.

இந்த கால இடைவெளி உலக வர்த்தக நடவடிக்கைகளில் அந்தந்த நாடுகளின் பங்களிப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. இந்தியாவின் வர்த்தகக் கொள்கை மறுஆய்வுகள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றன. 8-வது மறுஆய்விற்கான கூட்டம் 2021 ஜனவரி 1 முதல் 2025 டிசம்பர் 31 வரையிலான காலத்தை உள்ளடக்கியது.

இந்தியாவிற்கான வர்த்தகக் கொள்கை மறுஆய்வு செயல்முறை 2025 ஜூன் மாதம் தொடங்கியது. பதினான்கு மாத காலப்பகுதியில், வர்த்தகத் துறை 100-க்கும் மேற்பட்ட அமைச்சகங்கள், துறைகள், அமைப்புகளுடன் கலந்தாலோசித்து இச்செயல்முறையில் பங்கேற்றது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2286762&reg=3&lang=1

****

TV/RB/RJ


(रिलीज़ आईडी: 2286857) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी , Punjabi