WAVES BANNER 2025
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

இரண்டாவது வேவ்ஸ் உச்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் குறித்து தகவல் ஒலிபரப்புத் துறை செயலாளர், மகாராஷ்டிர முதலமைச்சருக்கு விளக்கமளித்தார்

 प्रविष्टि तिथि: 17 JUL 2026 6:04PM |   Location: PIB Chennai

தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சல் குமார் தலைமையிலான உயர்மட்டக் குழு, 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள இரண்டாவது உலக ஒலி-ஒளி பொழுதுபோக்கு உச்சிமாநாடான வேவ்ஸ் மாநாட்டின் (WAVES) ஆயத்தப் பணிகள் குறித்து மகாராஷ்டிர முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸை இன்று (17.07.2026) சந்தித்தது.

 

வேவ்ஸ் 2025-ன் முதல் பதிப்பு மாபெரும் வெற்றி பெற்றதாக மகாராஷ்டிர முதலமைச்சர் திரு ஃபட்னாவிஸ் தெரிவித்தார். வேவ்ஸ்-ன் முதல் பதிப்பு, 2025 மே 1 முதல் 4 வரை மும்பையில் நடைபெற்றது. உலகெங்கிலும் உள்ள கலைஞர்கள், படைப்பாளிகளிடையே ஒத்துழைப்பை வளர்ப்பதோடு, திரைப்படம், இசை, கேமிங், அனிமேஷன், கதைசொல்லல் உலகைக் காட்சிப்படுத்தும் ஒரு உலகளாவிய தளமாக வேவ்ஸ்-ஐ மேலும் உயரத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெளிவான அழைப்பு விடுத்துள்ளதாக திரு ஃபட்னாவிஸ் கூறினார். வேவ்ஸ்-ன் இரண்டாவது பதிப்பை இன்னும் பெரிய வெற்றியாக மாற்றுவதற்கு, மத்திய அரசும் மகாராஷ்டிர அரசும் நெருங்கிய ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டும் என்று மகாராஷ்டிர முதலமைச்சர் அழைப்பு விடுத்தார்.

 

சந்தப்பின்போது, தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சல் குமார், 2027-ம் ஆண்டு மும்பையில் நடைபெற உள்ள வேவ்ஸ்-ன் இரண்டாவது பதிப்பிற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சருக்கு விளக்கினார்.

 

முதலமைச்சருடனான சந்திப்பிற்கு முன்னதாக, தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு. சஞ்சல் குமார், வேவ்ஸ் 2027-க்கான ஏற்பாடுகளை மதிப்பிடுவதற்காக, அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் ஒரு ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285842&reg=3&lang=1

Release ID : 2285842

****

TV/PLM/SH

 


रिलीज़ आईडी: 2285976   |   Visitor Counter: 7

इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Gujarati , Telugu , Malayalam