விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடந்த ஆண்டில் 44 பயிர் வகைகளில் 386 மேம்படுத்தப்பட்ட ரகங்களை இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் உருவாக்கியுள்ளது – மத்திய அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான்

இடுகை இடப்பட்ட நாள்: 16 JUL 2026 4:38PM by PIB Chennai

வளர்ச்சியடைந்த இந்தியா 2047 என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் வகையிலும், அறிவியல் சார்ந்த  பருவநிலை மாற்றத்தை  எதிர்கொள்ளக்கூடிய விவசாயிகளுக்கு உகந்த வேளாண் வளர்ச்சியை முன்னெடுப்பதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையிலும், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் (ஐசிஏஆர்) புதுதில்லியில் இன்று தமது நிறுவன தினத்தைக் கொண்டாடியது.

1928-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி ஐசிஏஆர் நிறுவப்பட்டதை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் இது கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய மத்திய வேளாண், விவசாயிகள் நலன் ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் செளகான், இந்திய வேளாண் துறை மாற்றத்தில் ஐசிஏஆர் முன்னோடியாக திகழ்கிறது என்று கூறினார்.  உணவு தானியம், தோட்டக்கலை, பால், மீன்வள உற்பத்தி ஆகியவற்றில் நாட்டில் ஏற்பட்டுள்ள சாதனை அளவிலான முன்னேற்றங்களுக்கு  இக்குழுமத்தின் அறிவியல் ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும் சிறந்த பங்களிப்பைக் கொண்டுள்ளதாகக் கூறினார்.

கடந்த ஆண்டில் ஐசிஏஆர் 44 பயிர் வகைகளில் 386 மேம்படுத்தப்பட்ட ரகங்களை உருவாக்கி உள்ளதாகத் தெரிவித்தார். அவற்றில், 94 சதவீதம் பருவநிலை மாற்றத்தை எதிர்கொண்டு வளரக்கூடியவை என்றும் 29 ரகங்கள் உயிரி செறிவூட்டப்பட்டவை என்றும் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285387&reg=3&lang=1   

***

SS/IR/KPG/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2285611) வருகையாளர் எண்ணிக்கை : 41
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam