ரெயில்வே அமைச்சகம்
நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் எரிபொருள் ரயில் இயக்கப்பட உள்ளது
प्रविष्टि तिथि:
16 JUL 2026 11:14AM by PIB Chennai
நாட்டின் தூய்மையான எரிபொருளான ஹைட்ரஜனைப் பயன்படுத்தி ரயிலிலேயே தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இந்தியாவின் முதலாவது ஹைட்ரஜன் எரிபொருளால் இயங்கக்கூடிய ரயிலை இயக்க இந்திய ரயில்வே தயாராகிறது. இந்த ரயில், கரியமில வாயு வெளியீடின்றி செயல்படும்.
கடந்த 12 ஆண்டுகளில் மின்மயமாக்கல் விரைவுபடுத்தப்பட்டதன் மூலம் டீசல் இறக்குமதியைச் சார்ந்திருப்பது பெருமளவில் குறைந்துள்ளது. இது தூய்மைமிக்க ரயில்போக்குவரத்தின் அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு வழி வகுத்துள்ளது. தற்போது 99 சதவீதத்திற்கும் அதிகமான அகல ரயில் பாதை வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளது. மேல்நிலை மின்சாரக் கம்பிகள் மூலம் செயல்படும் மின்சார ரயில்களைப் போல் அல்லாமல் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கக் கூடிய ரயில், ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனுக்கு இடையே ரசாயன வினை மூலம் ரயிலிலேயே மின்சாரத்தை உற்பத்தி செய்யும். இதில் நீராவி துணைப் பொருளாக மட்டுமே வெளியேறும்.
நீராவி, டீசல் எஞ்சின்களைப் போல் ஹைட்ரஜன் ரயிலும் சொந்த ஆற்றலைக் கொண்டுள்ளது. நிலக்கரி அல்லது டீசல் போன்ற பாரம்பரிய எரிபொருட்களை எரிப்பதற்கு மாற்றாக வளிமண்டலத்தில் உள்ள ஆக்ஸிஜனைப் பயன்படுத்தி ஹைட்ரஜன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, எரிக்கப்படும் நிகழ்வோ அல்லது மின்சார விநியோகத்தைச் சார்ந்திருக்கும் நிலையோ இந்த ரயிலில் கிடையாது. தூய்மைமிக்க ஹைட்ரஜன் தொழில்நுட்பம் மூலம் ரயிலிலேயே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் நீடித்த போக்குவரத்தின் எதிர்காலத்தை முன்னெடுக்கும் மிகச்சிறந்த பசுமை ரயில்போக்குவரத்து முறையாக உள்ளது. இந்த இயக்கத்திற்குத் துணையாக ஹைட்ரஜன் கசிவு, வெப்பம், தீப்பிழம்புகள், புகையைக் கண்டறியும் திறன் கொண்ட பல அடுக்கு பாதுகாப்பு அமைப்புகளும் ரயிலில் பொருத்தப்பட்டுள்ளன.
ஜிண்ட் – சோனிபட் வழித்தடத்தில் மணிக்கு 75 கிமீ வேகத்தில் இயங்கும் திறனும் மணிக்கு 110 கிமீ வேகத்தில் செல்லக் கூடிய வடிவமைப்பையும் கொண்ட இந்த ரயில், 89 கிமீ தொலைவிலான இந்த வழித்தடத்தில் பாதுகாப்பாகவும் விரைவாகவும் செல்ல முடியும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285240®=3&lang=1
***
SS/IR/KPG/RJ
(रिलीज़ आईडी: 2285608)
आगंतुक पटल : 7