உள்துறை அமைச்சகம்
தில்லியில் உயிரி கழிவு எரிவாயு: யமுனை நதியைத் தூய்மைப்படுத்த மத்திய அரசு புதிய முன்னெடுப்பு
प्रविष्टि तिथि:
15 JUL 2026 5:25PM by PIB Chennai
தில்லியில் பசு எருவினை முறையாகப் பயன்படுத்தி அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு ஆலைகளை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தில்லி மாநகராட்சி மற்றும் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்திற்கு இடையே கையெழுத்தாகியுள்ளது. மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மத்திய அமைச்சர்கள் மற்றும் டெல்லி அரசின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்தத் திட்டம் குறித்துப் பேசிய மத்திய அமைச்சர் திரு. அமித் ஷா, நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களையும் தூய்மையாக மாற்றுவதற்கு இந்த ஒப்பந்தம் ஒரு சிறந்த முன்மாதிரியாக இருக்கும் என்று குறிப்பிட்டார். குறிப்பாக, கால்நடை வளர்ப்போரின் வருமானத்தை உயர்த்துவதுடன், நகரங்களின் தூய்மையைப் பேணுதல் மற்றும் இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்துதல் எனப் பல்வேறு நன்மைகளை இத்திட்டம் உள்ளடக்கியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டமான யமுனை நதி தூய்மைப்படுத்துதலில், இந்த ஒப்பந்தம் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. தில்லியில் சுமார் 1.25 லட்சம் கால்நடைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் யமுனை ஆற்றில் கலப்பதைத் தடுப்பது மிகவும் அவசியம். நங்லி, கோகா-கோயலா மற்றும் காசிப்பூர் ஆகிய இடங்களில் உள்ள கழிவு மேலாண்மை மையங்கள் மூலம் பசுஞ்சாணம் பதப்படுத்தப்பட உள்ளது. இதற்காக, கால்நடை வளர்ப்போருக்குப் பசு எருவிற்கு கிலோவுக்கு ஒரு ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் கழிவுநீர் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளைச் சுத்திகரிக்க ஏற்கனவே 80-க்கும் மேற்பட்ட ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இத்திட்டங்களின் தொடர்ச்சியாக, வரும் 2028-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள், யமுனை நதியில் ஒரு லிட்டர் அசுத்தமான நீர் கூட கலக்காத நிலையை உறுதி செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த முயற்சி, நகரங்களில் தூய்மையை நிலைநாட்டுவதோடு, இந்தியாவின் கிராமப்புற கால்நடை வளர்ப்போருக்கும் எதிர்காலத்தில் பெரும் பொருளாதாரப் பயனைத் தரும் என்று அமைச்சர் திரு. அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284949®=3&lang=1
செய்தி அடையாள எண்: 2284949
****
TV/VK/SH
(रिलीज़ आईडी: 2285187)
आगंतुक पटल : 5