விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு குறித்த கருத்தரங்கில் மத்திய அமைச்சர் திரு. சிவராஜ் சிங் சௌஹான் பங்கேற்பு

प्रविष्टि तिथि: 15 JUL 2026 6:31PM by PIB Chennai

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு குறித்த கருத்தரங்கில் உரையாற்றிய மத்திய வேளாண் அமைச்சர் திரு. சிவராஜ் சிங் சௌஹான், பெருநிறுவனங்கள் தங்களது வருவாயின் ஒரு பகுதியை விவசாயிகள், வேளாண் ஆராய்ச்சி, கிராமப்புற சமூகங்களின் நலனுக்காக அர்ப்பணிக்குமாறு அவர் வலியுறுத்தினார். வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்கும் அதே வேளையில், பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு மூலம் வேளாண்மை, ஊரக மேம்பாட்டுப் பணிகளில் முதலீடு செய்து, நாட்டைக் கட்டமைப்பதில் உத்வேகம் அளிக்கும் பங்குதாரராகத் திகழ்வது தொழில்துறையின் பொறுப்பு என்று அவர் குறிப்பிட்டார்.

ஆராய்ச்சி என்பது ஆய்வகங்களுக்குள் மட்டும் முடங்கிவிடக் கூடாது என்றும், அது "அறிவியலிலிருந்து விவசாயிகளுக்கு" என்ற வகையில் ஒரு பாலமாக அமைய வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். பருவநிலை மாற்றத்தை எதிர்கொண்டு வளரும் விவசாயம், மண் வளம், சத்துமிக்க உணவு முறைகள், வேளாண் திறன் மேம்பாடு, பெண் விவசாயிகளின் தொழில்முனைவு போன்ற துறைகளில், பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு சார்ந்த முதலீடுகள் உறுதியான தாக்கத்தை ஏற்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பெருநிறுவனங்கள், அமைச்சர்கள், விஞ்ஞானிகள், அரசு அதிகாரிகள், விவசாயிகள் என அனைவரும் ஒன்றிணைந்து, வேளாண் பணிகளுக்கான முழு அளவிலான மதிப்புச் சங்கிலியை உருவாக்கும் ஒரு தனித்துவமிக்க தளமாக இந்தக் கருத்தரங்கு அமைந்திருப்பதாக திரு. சிவராஜ் சிங் சௌஹான் விவரித்தார். மகாத்மா காந்தியின் பொறுப்பாளர் தத்துவத்தைக் குறிப்பிட்ட அவர், வசதி படைத்தவர்கள் அதன் உரிமையாளர்கள் அல்ல, மாறாக அதன் பொறுப்பாளர்கள் மட்டுமே என்றும், செல்வம் என்பது இறுதியில் சமூகத்திற்கே சொந்தமானது என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285029&reg=3&lang=1

(Release ID: 2285029)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2285120) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada