குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
பாரத் டெக்ஸ் 2026 ஜவுளிக் கண்காட்சியில், காதி இந்தியா அரங்கை, கேவிஐசி தலைவர் திரு மனோஜ் கோயல் திறந்து வைத்தார்
प्रविष्टि तिथि:
15 JUL 2026 12:56PM by PIB Chennai
மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் காதி, கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவர் திரு. மனோஜ் கோயல், செவ்வாய்க்கிழமை அன்று பாரத் டெக்ஸ் 2026 கண்காட்சியில்,காதி இந்தியா அரங்கைத் திறந்து வைத்தார்.
பின்னர் அந்த அரங்கை ஆய்வு செய்த அவர், கண்காட்சியாளர்கள், கைவினைஞர்கள், காதி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச அளவிலான பாரத் டெக்ஸ் கண்காட்சி, புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.
காதி, கிராமத் தொழில்கள் ஆணையத்தால் அமைக்கப்பட்டுள்ள இந்த அரங்கு, நாடு முழுவதிலும் இருந்து இந்தக் கண்காட்சியில் பங்கேற்றுள்ள காதி நிறுவனங்களின் பெரும்பாலான தயாரிப்புகள், வடிவமைப்பு சார்ந்த புதுமைகள், பிரத்யேகத் தொகுப்புகளை காட்சிப்படுத்துகிறது.
இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த காதி நிறுவனங்களின் பிரதிநிதிகள், கைவினைஞர்களுடன் கலந்துரையாடிய திரு கோயல், அவர்களது அனுபவங்கள், புதுமையான முயற்சிகள் குறித்த தகவல்களை அறிந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் காதி, கிராமத் தொழில்கள் ஆணையம், காதி நிறுவன சிறப்பு மையத்தின் மூத்த அதிகாரிகள், ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284733®=3&lang=1
***
SS/SV/SH
(रिलीज़ आईडी: 2285067)
आगंतुक पटल : 8