நிதி அமைச்சகம்
வெளிநாட்டு வர்த்தகக் கடன்கள் உள்ளிட்டவற்றின் பரிமாற்ற முன்னெடுப்புகள் குறித்து வங்கி நிர்வாக இயக்குநர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கலந்துரையாடினார்
இடுகை இடப்பட்ட நாள்:
13 JUL 2026 5:02PM by PIB Chennai
பயணிகளின் விவரங்களை ஆராய்ந்ததன் அடிப்படையில், 2026 ஜூலை 12 அன்று கோலாலம்பூரிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த இந்தியப் பயணி ஒருவரை சென்னை சுங்கத்துறையின் விமானப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இடைமறித்து சோதித்தனர்.
பயணியின் பதிவு செய்யப்பட்ட பைகளை எக்ஸ்-ரே பரிசோதனை செய்ததில், கெட்டியான மற்றும் அதிக வாடையை வெளியிடும் பச்சை நிற, பொருள் அடங்கிய 49 பொட்டலங்கள் மீட்கப்பட்டன. நீர்க் கலவையில் வளர்க்கப்படும் உயர் ரக கஞ்சா என சந்தேகிக்கப்படும் அதன் மொத்த எடை 4,639 கிராம். இந்தக் கடத்தல் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தப் பயணி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார், மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தப் பறிமுதலைத் தொடர்ந்து, நிதியுதவியுடன் கூடிய வெளிநாட்டுப் பயணங்கள் அல்லது எளிதாகப் பணம் சம்பாதிப்பது போன்ற சலுகைகள் குறித்து பொதுமக்கள், குறிப்பாக இளைஞர்கள், விழிப்புடன் இருக்குமாறு சென்னை சுங்கத்துறை அறிவுறுத்தியுள்ளது. சமீபத்திய பகுப்பாய்வில், கடத்தல் கும்பல்கள் இளம் வயதினரின் பயணம், தங்குமிடம் மற்றும் பிற செலவுகளுக்கு நிதியுதவி அளித்து, அவர்களைக் குறிவைத்து, பின்னர் அவர்கள் மூலம் இந்தியாவுக்குள் கடத்தல் பொருட்களை எடுத்து வந்து விநியோகிப்பது
தெரியவந்துள்ளது. இவை சட்டத்தின் கீழ் கடுமையான குற்றங்களாகும், மேலும் இவை கடுமையான தண்டனையையும் நீண்டகால சட்ட விளைவுகளையும் ஏற்படுத்தும். மேலும் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது வாழ்க்கையைச் சீரழித்துவிடும்.
***
TV/SMB/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2284260)
வருகையாளர் எண்ணிக்கை : 51