ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாரத் டெக்ஸ் 2026 புதுதில்லியில் ஜூலை 14 அன்று தொடங்குகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 13 JUL 2026 2:22PM by PIB Chennai

இந்தியாவின் மிகப்பெரிய உலகளாவிய ஜவுளி நிகழ்வான பாரத் டெக்ஸ் 2026 ஜூலை 14 அன்று தொடங்கி 17-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் அதற்கான ஏற்பாடுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இது நாடு முழுவதும் உள்ள ஜவுளித்துறை சார்ந்த அனைத்துப் பிரிவுகளையும் உலகளாவிய தளத்தில் ஒருங்கிணைக்கிறது. மத்திய ஜவுளி அமைச்சகத்தின் ஆதரவுடன் ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுக்கள் மற்றும் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான பாரத் டெக்ஸ் வர்த்தகக் கூட்டமைப்பு இதற்கு ஏற்பாடு செய்துள்ளது. ஜவுளி, ஆடைவடிவமைப்பு, நீடித்தத் தன்மை, தொழில்நுட்பம், முதலீடு, சர்வதேச வர்த்தகம் ஆகியவற்றில் இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய தலைமைத்துவத்தை இந்நிகழ்ச்சி சுட்டிக்காட்டுகிறது.

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங், பாரத் டெக்ஸ் 2026-ஐ ஜூலை 14 அன்று தொடங்கி வைக்கிறார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284067&reg=3&lang=1   

***

SS/IR/KPG/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2284241) வருகையாளர் எண்ணிக்கை : 43
இந்த வெளியீட்டை படிக்க: हिन्दी , Telugu , English , Urdu , Bengali , Bengali-TR , Gujarati , Kannada , Malayalam