பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நித்தி ஆயோக் மறுசீரமைக்கப்பட்டதற்குப் பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 25 APR 2026 10:46PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, நித்தி ஆயோக் மறுசீரமைக்கப்பட்டதற்குத் தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். நித்தி ஆயோக், இந்தியாவின் கொள்கை வகுக்கும் கட்டமைப்பில் ஒரு முக்கியத் தூணாக உருவெடுத்து, கூட்டுறவு கூட்டாட்சியை வளர்த்து, முக்கிய சீர்திருத்தங்களை முன்னெடுத்து, மக்களின் வாழ்க்கையை எளிமைப்படுத்துவதை மேம்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அமைப்பு, பல்வேறு துறைகளில் புத்தாக்கம், நீண்டகால உத்திசார் சிந்தனை ஆகியவற்றுக்கான ஒரு ஆற்றல்மிக்க தளமாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.

நித்தி ஆயோக் மறுசீரமைக்கப்பட்டதையடுத்து, துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரு அசோக் குமார் லஹிரிக்கு பிரதமர் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும், முழுநேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள திரு ராஜீவ் கௌபா, பேராசிரியர் கே.வி. ராஜு, பேராசிரியர் கோபர்தன் தாஸ், பேராசிரியர் அபய் கரண்டிகர், டாக்டர் எம். சீனிவாஸ் ஆகியோருக்கும் அவர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது

இந்தியாவின் கொள்கை வகுக்கும் கட்டமைப்பில் நித்தி ஆயோக் ஒரு முக்கியத் தூணாக உருவெடுத்துள்ளது. இது கூட்டுறவு கூட்டாட்சியை வளர்த்து, சீர்திருத்தங்களை முன்னெடுத்து, வாழ்க்கையை எளிமைப்படுத்துவதை மேம்படுத்துகிறது. மேலும், இது பல்வேறு துறைகளில் புத்தாக்கம், நீண்டகால உத்திசார் சிந்தனை ஆகியவற்றுக்கான ஒரு ஆற்றல்மிக்க தளமாகச் செயல்படுகிறது.

அரசு நித்தி ஆயோக்கை மறுசீரமைத்துள்ளது. துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள திரு அசோக் குமார் லஹிரி அவர்களுக்கு எனது நல்வாழ்த்துகள். மேலும், நிதி ஆயோக்கின் முழுநேர உறுப்பினர்களாகப் பொறுப்பேற்றுள்ள திரு ராஜீவ் கௌபா, பேராசிரியர் கே.வி. ராஜு, பேராசிரியர் கோபர்தன் தாஸ், பேராசிரியர் அபய் கரண்டிகர், டாக்டர் எம். சீனிவாஸ் ஆகியோருக்கும் எனது நல்வாழ்த்துகள்.

இவர்கள் அனைவருக்கும் பயனுள்ள, நல்ல தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு சிறந்த பதவிக்காலம் அமைய வாழ்த்துகிறேன்.

***

(Release ID: 2255594)

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2284232) வருகையாளர் எண்ணிக்கை : 67