பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கேங்டாக் ஆர்க்கிடேரியத்திற்கு சென்ற பிரதமர் சிக்கிமின் அசாதாரண பல்லுயிர் பெருக்கத்துக்கு பாராட்டு தெரிவித்தார்

प्रविष्टि तिथि: 28 APR 2026 3:15PM by PIB Chennai

சிக்கிம் மாநிலம் கேங்டாக்கில் உள்ள ஆர்க்கிடேரியத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சென்று, அதன் அழகு மற்றும் மாநிலத்தின் அசாதாரண பல்லுயிர் பெருக்கம் குறித்து தமது  பாராட்டைத் தெரிவித்துள்ளார்.

ஆர்க்கிடேரியத்திற்கு சென்றது மனதைக் கவரும் ஒரு அனுபவமாக இருந்தது என்று பிரதமர் விவரித்தார். அர்ப்பணிப்புடன் கூடிய இத்தகைய பாதுகாப்பு முயற்சிகள் இயற்கை உலகத்துடன் நமது ஆழமாக வேரூன்றிய நல்லிணக்கத்தை முழுமையாப் பிரதிபலிக்கின்றன என்று திரு மோடி குறிப்பிட்டார். இந்த முன்முயற்சிகள் குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் நிலையான வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள ஒரு முக்கிய உத்வேகமாக செயல்படுகின்றன என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில்  பிரதமர் கூறியிருப்பதாவது;

"கேங்டாக்கில் உள்ள ஆர்க்கிடேரியத்திற்குச் சென்று அதன் அழகைக் கண்டு ரசித்தேன். சிக்கிமின் வளமான பல்லுயிர் பெருக்கம் உண்மையிலேயே அசாதாரணமானது. இத்தகைய முயற்சிகள் இயற்கையுடனான நமது ஆழமான நல்லிணக்கத்தைப் பிரதிபலிக்கின்றன. பாதுகாப்பு மற்றும் நிலையான வாழ்க்கைக்கு அவை நம்மை ஊக்குவிக்கின்றன ".

***

(Release ID: 2256226)

SS/PKV/SH


(रिलीज़ आईडी: 2284195) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam