சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் 3-வது வழிகாட்டும் குழுக் கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் திரு ஜெ பி நட்டா தலைமை தாங்கினார்
प्रविष्टि तिथि:
10 JUL 2026 2:42PM by PIB Chennai
ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்கும், இந்தியாவின் டிஜிட்டல் சுகாதார சூழல் அமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான செயல்திட்டம் குறித்து விவாதிப்பதற்கும் இன்று (10.07.2026) நடைபெற்ற வழிகாட்டும் குழுவின் 3-வது கூட்டத்திற்கு மத்திய சுகாதாரம், குடும்பநலத்துறை அமைச்சர் திரு ஜெகத் பிரகாஷ் நட்டா தலைமைத் தாங்கினார்.
ஆயுஷ்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு பிரதாப் ராவ் ஜாதவ், சுகாதாரம், குடும்பநலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல், தொழில், வர்த்தகம், மின்னணு, தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா, நித்தி ஆயோகின் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் எம் ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய திரு நட்டா, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம், தரமான சிகிச்சை கிடைப்பதை மேம்படுத்துவதிலும் தொடர்ச்சியான கவனிப்பை விரிவுபடுத்துவதிலும் பாதுகாப்பான, ஒப்புதல் அடிப்படையிலான சுகாதார ஆவணங்களை அணுகுவதன் மூலம் குடிமக்களுக்கு அதிகாரமளிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றார். அனைவருக்கும் சுகாதார வசதி என்பதை அடைவதற்கு தொழில்நுட்பம் தொடர்ந்து ஆற்றல்மிக்கதாக செயல்பட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.
மாதிரி மாவட்டங்கள், மாதிரி வசதிகள், ஆரோக்கிய சேது 2.0 போன்ற முன்முயற்சிகள் மூலம் மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் வேகமாக விரிவடைந்து வருவதற்கு இந்த குழு பாராட்டு தெரிவித்தது. இந்த முன்முயற்சிகள், சுகாதார வசதியை மேலும் எளிதாக்கியிருப்பதாக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் கீழ் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் சுகாதார உள்கட்டமைப்பு வலுவானதாக இருக்கும் நிலையில், அடுத்த கட்டம் என்பது நாடு முழுவதும் இதன் ஏற்பையும், பயன்பாட்டையும் உச்சநிலைக்கு கொண்டு செல்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூட்ட நிறைவில் அமைச்சர் கருத்து தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283272®=3&lang=1
***
SS/SMB/RJ/SH
(रिलीज़ आईडी: 2283394)
आगंतुक पटल : 11