பிரதமர் அலுவலகம்
உறுதிப்பாட்டின் சக்தி, நேர்மறை சிந்தனை ஆகியவற்றை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
09 JUL 2026 7:39AM by PIB Chennai
உறுதியுடன் கூடிய நம்பிக்கை, தொடர் முயற்சி, நேர்மறையான சிந்தனை ஆகியவை வெற்றிக்கான உண்மையான திறவுகோல்கள் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்தக் குணங்களுடன் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதற்காக நாட்டின் இளைஞர்கள், முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இது குறித்த சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்:
“முன்னேற்றம் என்பது உற்சாகம், உறுதியான நம்பிக்கை, தொடர் முயற்சி ஆகியவற்றின் அடிப்படையில் அமைவதாக சுபாஷிதம் கூறுகிறது. மன சோர்வின்றி, தன்னுடைய இலக்கை நோக்கி தொடர்ந்து செயல்படும் ஒருவர் வெற்றியடைகிறார். அதனால், அசைக்க முடியாத நம்பிக்கை, அரப்பணிப்பு ஆகியவற்றுடன் ஒருவர் தொடர்ந்து செயல்பட வேண்டும். இந்தக் குணங்களே, ஒருவரின் வாழ்க்கையில் முன்னேற்றம், வெற்றி, சிறப்பான நிலை ஆகியவற்றை நோக்கி முன்னெடுத்துச் செல்கின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282669®=3&lang=1
***
SS/IR/KPG/KR
(रिलीज़ आईडी: 2282853)
आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Malayalam