சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
காசநோய் இல்லாத இந்தியா இயக்கத்தை வலுப்படுத்த மத்திய அமைச்சர் திரு ஜெ பி நட்டா தலைமையில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது
प्रविष्टि तिथि:
07 JUL 2026 3:21PM by PIB Chennai
காசநோய் இல்லாத இந்தியா இயக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜெ பி நட்டா தலைமையில் புதுதில்லியில் இன்று அமைச்சகங்களுக்கு இடையிலான உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இளையோர் நலன், விளையாட்டு, தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் ஆகியோர் பங்கேற்றனர். அரசின் ஒருங்கிணைந்த அணுகுமுறை மூலம் இந்தத் திட்டத்தை நாடு முழுவதும் தீவிரமாக முன்னெடுத்துச் செல்வது குறித்து இதில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இளைஞர்களின் ஆற்றலைப் பயன்படுத்தி இந்த இயக்கத்தை நாடு தழுவிய மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்று அமைச்சர் திரு ஜெ பி நட்டா கேட்டுக்கொண்டார்.
எனது பாரதம் (மை பாரத்) அமைப்பின் தன்னார்வலர்கள், தேசிய மாணவர் படை வீரர்களை இதற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தில் அதிகளவில் ஈடுபடுத்துமாறு மத்திய அமைச்சர் வலியுறுத்தினார். கட்டுமானத் தொழில்கள், சுரங்கங்கள் போன்ற அதிக பாதிப்புள்ள பணியிடங்களில் தொழிலாளர்களுக்குக் காசநோய் பரிசோதனைகளை மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கடந்த 2024 டிசம்பரில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து நாடு முழுவதும் 28 கோடிக்கும் அதிகமான நபர்களுக்குப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, 39 லட்சம் காசநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களில் அறிகுறிகள் தென்படாத 12 லட்சத்திற்கும் அதிகமான நோயாளிகளும் அடங்குவர். பதிவுசெய்யப்பட்ட 5 லட்சத்திற்கும் மேற்பட்ட நிக்ஷய் மித்ராக்கள் மூலம் நோயாளிகளுக்கு 38.9 லட்சம் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281989®=3&lang=1
***
SS/PD/SH
(रिलीज़ आईडी: 2282180)
आगंतुक पटल : 13