பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
கொச்சியில் ஜூலை 8-9 தேதிகளில் அமைச்சர்கள் நிலையிலான பிரிக்ஸ் மகளிர் மாநாட்டை இந்தியா நடத்தவுள்ளது
प्रविष्टि तिथि:
07 JUL 2026 10:17AM by PIB Chennai
2026 பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் கீழ், 2026 ஜூலை 8-9 தேதிகளில் கேரளத்தின் கொச்சியில் அமைச்சர்கள் நிலையிலான பிரிக்ஸ் மகளிர் மாநாட்டை இந்தியா நடத்தவுள்ளது. ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், பெண்களுக்கு அதிகாரமளித்தலை மேம்படுத்தவும், அனைவரையும் உள்ளடக்கிய, மீள்திறன் கொண்ட, நீடித்த வளர்ச்சிக்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டை வலியுறுத்தவும் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் அமைச்சர்களும் தூதுக்குழுத் தலைவர்களும் இம்மாநாட்டில் ஒன்றிணைவார்கள்.
மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு, நிலைத்தன்மை ஆகிய நான்கு தூண்களை இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவம் அடிப்படையாகக் கொண்டுள்ளது. பிரிக்ஸ் மகளிர் பிரிவு, இந்த ஒவ்வொரு பரிமாணத்திலும் பெண்களின் அதிகாரமளித்தலை மேம்படுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. 2026 ஜூலை 6 - 7 தேதிகளில் நடைபெற்ற பிரிக்ஸ் மகளிர் பணிக்குழு கூட்டத்தைத் தொடர்ந்து அமைச்சர்கள் நிலையிலான கூட்டம் நடைபெறுகிறது.
அமைச்சர்கள் நிலையிலான இந்தக் கூட்டத்துடன், ஊரக வளர்ச்சி, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (ஸ்டெம்), ஊட்டச்சத்து, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெண்கள் தலைமையிலான மேம்பாட்டில் இந்தியாவின் சாதனைகளை வெளிப்படுத்தும் கண்காட்சிகளும் இடம்பெறும். மேலும், இந்த நிகழ்ச்சியில் புகழ்பெற்ற நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள், செயல்முறை வல்லுநர்களுடன் ஒரு முழு அமர்வும் கருப்பொருள் சார்ந்த குழு விவாதங்களும் இடம்பெறும். இது, அனுபவங்களைப் பரிமாறிக்கொள்ளவும், புதுமையான அணுகுமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும், பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்கான கூட்டாண்மைகளை அதிகரிக்கவும் ஒரு வாய்ப்பை வழங்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281868®=3&lang=1
***
SS/SMB/KR
(रिलीज़ आईडी: 2282037)
आगंतुक पटल : 18