மக்களவை செயலகம்
ஜனநாயக மரபுகளை வலுப்படுத்தவும், மாநிலத்தின் மறுமலர்ச்சிக்குத் தலைமை தாங்கவும் மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மக்களவைத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்
प्रविष्टि तिथि:
03 JUL 2026 4:04PM by PIB Chennai
கொல்கத்தாவில் நடைபெற்ற மேற்கு வங்கச் சட்டமன்றத்தின் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கான இரு நாள் அறிமுகப் பயிற்சி முகாமைத் தொடங்கி வைத்துப் பேசிய மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா, ஜனநாயக மரபுகளை வலுப்படுத்துமாறும், மாநிலத்தின் மறுமலர்ச்சிக்குத் தலைமை தாங்குமாறும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மக்களின் விருப்பங்களின் பாதுகாவலர்கள் என்பதை வலியுறுத்திய திரு பிர்லா, மேற்கு வங்கத்தின் செழுமையான ஜனநாயக மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தைக் கட்டிக்காப்பதுடன், ஆழமான புரிதலுடனான சட்டமியற்றுதல், ஆக்கபூர்வமான விவாதங்கள் மற்றும் சிறந்த நிர்வாகம் ஆகியவற்றில் உறுப்பினர்கள் தீவிரப் பங்காற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
சட்டமன்ற விவாதங்கள் வெறும் விமர்சனங்களை மட்டும் முன்வைக்காமல் தீர்வுகளை மையமாகக் கொண்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்திய திரு பிர்லா, ஆக்கபூர்வமான விவாதமே துடிப்பான ஜனநாயகத்தின் அடையாளம் என்று குறிப்பிட்டார். சட்டமன்றச் செயல்பாட்டில் விமர்சனம் ஒரு முக்கிய அங்கமாக இருந்தாலும், ஒவ்வொரு விவாதமும் பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு நடைமுறைக்குச் சாத்தியமான தீர்வுகளை வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். ஜனநாயக ரீதியிலான கருத்துப் பரிமாற்றத்தின் தரத்தை மேம்படுத்தும் வகையில், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை உண்மைகள், ஆய்வுகள் மற்றும் தர்க்கரீதியான வாதங்களின் அடிப்படையில் முன்வைக்க வேண்டும் என்றும் திரு பிர்லா சுட்டிக்காட்டினார்.
தொழில்நுட்பத்தின் வளர்ந்து வரும் பங்கை எடுத்துரைத்த திரு. பிர்லா, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் சட்ட விவாதங்கள், கொள்கை ஆவணங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளை சட்டமன்ற உறுப்பினர்கள் அணுகுவதற்கு டிஜிட்டல் யுகம் முன்னெப்போதும் இல்லாத வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றார். டிஜிட்டல் சன்சத் தளத்தைக் குறிப்பிட்ட அவர், உறுப்பினர்கள் இப்போது நாடாளுமன்ற அறிவு மற்றும் ஒப்பீட்டு சட்ட அனுபவங்களின் பரந்த களஞ்சியத்திலிருந்து பயனடைய முடியும் என்றார்.
ஜனநாயகத்தில் உடன்பாடும் கருத்து வேறுபாடும் இயல்பான அம்சங்கள் என்று சபாநாயகர் குறிப்பிட்டார். இருப்பினும், கருத்து வேறுபாடுகள் எப்போதும் பகுத்தறிவுள்ள, கண்ணியமான மற்றும் மரியாதைக்குரிய விவாதத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். என்பவை மாறுபட்ட கருத்துகள் பெருகும் அதே வேளையில், ஜனநாயக மாண்புகள் மேலோங்கி நிற்கும் இடமாக சட்டமன்றங்கள் திகழ வேண்டும் என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280729®=3&lang=1
***
TV/RB/RJ
(रिलीज़ आईडी: 2281217)
आगंतुक पटल : 8