நிதி அமைச்சகம்
மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் நாட்டிற்கு 4 நாள் அரசு முறைப் பயணம்
प्रविष्टि तिथि:
01 JUL 2026 12:56PM by PIB Chennai
மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நான்கு நாள் அரசு முறைப் பயணமாக இன்று பிரான்ஸ் புறப்பட்டார். இந்தப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதாரக் கூட்டாண்மையை வலுப்படுத்துதல், முதலீடுகளை ஊக்குவித்தல், தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றில் அவர் கவனம் செலுத்த உள்ளார். ஐக்ஸ்-என்-பிராவின்ஸ் நகரில் நடைபெறும் இந்தியா - பிரான்ஸ் பொருளாதார, நிதி ரீதியிலான பேச்சுவார்த்தைக்கு பிரான்ஸ் பொருளாதாரத் துறை அமைச்சர் திரு ரோலண்ட் லெஸ்குரே உடன் இணைந்து அவர் தலைமை தாங்கவுள்ளார். இக்கூட்டத்தில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்படும்.
இதனைத் தொடர்ந்து, உலகளாவிய முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், தலைவர்களுடனான வட்டமேஜை விவாதங்களில் பங்கேற்கும் அமைச்சர், இந்தியாவின் வலுவான பொருளாதார அம்சங்கள், கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் குறித்து எடுத்துரைக்க உள்ளார். மேலும், நடுத்தர வர்க்கத்தினரின் வளர்ச்சியை ஊக்குவிப்பது குறித்த சர்வதேச அளவிலான குழு விவாதத்திலும் அவர் உரையாற்றுகிறார். இந்தியாவும் பிரான்ஸும் பங்களிப்பாளர்களாக உள்ள சர்வதேச தெர்மோநியூக்ளியர் சோதனை உலை திட்டத்தை அவர் நேரில் பார்வையிடுகிறார். சைபர் பாதுகாப்பு, டிஜிட்டல் பொருளாதாரத்தில் புத்தாக்கத்திற்கான பிரான்ஸின் தேசிய மையத்திற்கும் அவர் செல்லவுள்ளார். இறுதியாக, பிரான்ஸில் வாழும் இந்திய வம்சாவளியினரை அமைச்சர் சந்திக்கவுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279720®=3&lang=1
****
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2280067)
आगंतुक पटल : 10