மருந்துகள் துறை
பாரத் உயிர் அறிவியல் விருது 2026-க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
प्रविष्टि तिथि:
01 JUL 2026 5:22PM by PIB Chennai
இந்தியாவின் உயிர் அறிவியல் அமைப்பின் அறிவியல் ஆராய்ச்சி, புதுமை கண்டுப்பிடிப்பு, பொது சுகாதார தாக்கம் ஆகியவற்றில் சிறப்பாக விளங்குவோரை அங்கீகரிக்கும் வகையில் பாரத் உயிர் அறிவியல் விருது 2026-க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.7 கோடி நிதியுதவியுடன் வழங்கப்படும் இவ்விருது சுகாதாரம், உயிர் அறிவியல் துறைகளை மேம்படுத்தும் சிறந்த விஞ்ஞானிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் இத்துறைகளின் புத்தொழில் நிறுவனங்களை அங்கீகரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முன்முயற்சிக்கு முதன்மை மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம், மருந்தியல்துறை, உயிரித் தொழில்நுட்பத்துறை ஆராய்ச்சி உதவிக்கான குழுமம், இன்வெஸ்ட் இந்தியா ஆகியவை ஆதரவளிக்கின்றன.
சிறப்பாக செயல்பட்ட தனிநபர், கூட்டுப் புதுமைக் கண்டுபிடிப்பு, சிறப்பாக செயல்பட்ட நிறுவனம், சுகாதாரம் மற்றும் உயிர் அறிவியல் சார்ந்த புத்தொழில் நிறுவனங்கள், அறிவியல் சூழல் மேம்பாடு ஆகிய 5 பிரிவுகளின் கீழ் 6 விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை ஏற்றுக் கொள்ளப்படும். விண்ணப்பக்கட்டணம் ஏதும் கிடையாது. இது குறித்த விவரங்களை www.bharatlifesciencesawards.com என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279926®=3&lang=1
****
TV/IR/KPG/SH
(रिलीज़ आईडी: 2280034)
आगंतुक पटल : 8